என்னய்யா சொன்னார் வாசுகி பாஸ்கர்?
என்னய்யா சொன்னார் வாசுகி பாஸ்கர்? ஆளாளுக்கு பொங்குகின்றார்களே தவிர என்ன சொன்னார் என சொல்லவே இல்லை
ஸ்டாலின் எடப்பாடியிடம் கொடுத்த 27 பரிந்துரைகளை ஸ்டாலினே படித்திருக்க மாட்டார் என வாசுகி பாஸ்கர் சொன்னாராம், இதுதான் பிரச்சினையாம்
ஸ்டாலினின் அணுகுமுறைகளில் வித்தியாசமிருக்கலாம் ஆனால் மேயர், துணை முதல்வர் என பல பொறுப்புக்களை அவர் வகித்துவிட்டுத்தான் செயல் தலைவராகி இருக்கின்றார் என்பது கவனிக்கதக்க விஷயம்
அதனால் சில பரிந்துரைகளை சொல்ல அவருக்கு தகுதி இருக்கின்றது, சொல்லிவிட்டார்
ஸ்டாலினின் பரிந்துரைகளை சீண்டும் வா.பாஸ்கர் இந்த ராமதாஸ் சொல்லும் பரிந்துரைகளை ஏன் கண்டுகொள்ளவில்லை
அவரும் வருடாவருடம் நிழல்பட்ஜெட் என ஒன்று போடுவார், அவராகவே தமிழக பட்ஜெட் தயாரிப்பார்,அவரே வாசிப்பார் அவரே கிழித்தும் போடுவார்
அவர் முன்னாள் எம்.எல்.ஏ வாக இருந்தாரா? சபா நாயகராக இருந்தாரா? இல்லை கோட்டையில் குமாஸ்தாவாக கூட இருந்தாரா?
அதனை பற்றி என்றாவது வாய் பாஸ்கர் பேசியிருப்பாரா?
அதை விடுங்கள், தமிழக பட்ஜெட்டை ஜெயா சமாதியில் வைத்து பூஜித்தாரே தமிழக நிதியமைச்சர், அப்பொழுது எங்கே சென்றார் இவர்?
ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல ஸ்டாலினை சீண்டியிருக்கின்றார்