என்ன ஒரு வேகம்? என்ன ஒரு ஓட்டம்? என்ன ஒரு பல்டி?
உசேன் போல்ட் அசந்து போய் இருக்கின்றார், அவமானத்தால் நொறுங்கிபோய் இருக்கின்றார்
ஓட்டபந்தயத்தில் தான் மட்டுமே மிக வேகமானவன் என்ற அவரின் பெருமிதத்தை தமிழக அதிமுக எம்.எல்.ஏக்கள் நொறுக்கி கொண்டிருக்கின்றனர்
என்ன ஒரு வேகம்?
முதலில் ஜெயா கார் ஹெலிகாப்டர் என ஓட்டம், , பின் பன்னீர், பின் கூவத்தூரில் சசிகலா, பின் பழனிச்சாமி, இப்பொழுது தினகரன் பின்னால் என அப்படி ஒரு வேகம்
ஓடுவது கூட பெரிய விஷயம் இல்லை, இப்படி குறுக்கே வெட்டி, பல்டி அடித்து, அதே வேகத்தில் பின்னோக்கி ஓடுவது எல்லாம் எப்படி சாத்தியம்
அவர்களை தவிர யாராலு முடியாது, அப்படி ஒரு வேகம், சளைக்காத வேகம்…
இப்படிபட்ட அதிவேக ஓட்டபந்தய வீரர்கள் ஓலிம்பிக்குற்கு வரவில்லை என்பதுதான் உசேன் போல்டின் ஆறுதல்
இப்படிபட்ட பல்டி பயில்வான்கள் வரவில்லை என்பதுதான் சீன,ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரர்களின் சந்தோஷம்
என்ன ஒரு ஓட்டம், என்ன ஒரு பல்டி?
இந்த ஓட்டபந்தய, ஜிம்னாஸ்டிக் வீரர்களை விட ஆச்சரியமாக இன்னும் சிலர் இருக்கின்றார்கள்
அவர்கள் எந்த அணி என தெரியாமலே “நல்லநேரம்” படத்தில் அவர்கள் தலைவன் களை கம்பு உச்சியில் நிற்பது போலவே நிற்கின்றார்கள், அவர்கள் எப்பக்கம் சாய்வார்கள் என பன்னீர், பழனிச்சாமி, தினகரன் கோஷ்டி பார்த்துகொண்டே இருக்கின்றது
இவர்களுக்கும் “நல்ல நேரம்” என்பதுதான் பெரும் கொடுமை
கொசுறு
கோவையில் காட்டு யானை அட்டகாசம்
அம்மா ஆட்சியில் நடந்த யானைகளுக்கான முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் இப்பொழுது நடக்காத கோபமாக இருக்கலாம்
அதனால் வனதுறை அமைச்சர் அந்த முகாமினை உடனடியாக நடத்துவது அம்மா கனவினை நனவாக்கும் செயலாகும்..
டிவியில் மிஷ்டி தோய் செய்வது எப்படி என விளக்கிகொண்டிருக்கின்றார்கள், ஆசான்Pa Raghavan நினைவு வருகின்றது
ருசியியலில் மிக ரசித்து அதன் சுவையினை சொன்னவர் அவர்தான், நன்றாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது
சில கல்கத்தாகாரர்கள் அக்கம் பக்கம் உண்டு, விசாரித்து செய்து ஆசானின் ருசியியல் பாடத்தை செய்முறையாக்கி விட வேண்டியதுதான்