என்ன சாதித்தார்?

தேர்தல் தேதி அறிவிக்கபட்டபின் ஒரு அரசு காபந்து அரசு அதாவது அதிகாரமற்ற பெயரளவிலான அரசு என்றாகிவிடுகின்றது

அவ்கையில் தேர்தல் அறிவிக்கபட்டதால் மோடி அரசு இனி காபந்து அரசு. இந்த 5 ஆண்டுகளில் மோடி என்ன சாதித்தார் என்றால் முதலில் நல்ல விஷயங்களை சொல்லலாம்

பெரிதாக ஊழல் இல்லை, ரபேல் விமானம் என கத்தினாலும் ஆதாயம் பெற்றவர்களையோ இல்லை ஆதாரங்களையோ காட்டமுடியவில்லை

அதை தவிர வேறு ஊழல் இல்லை, கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கலாம் ஆனால் அது நல்ல நோக்கம் என்பதை மறுப்பதற்கில்லை, நெப்போலியன் சொன்னபடி தளபதி திறமையானவாக இருந்து வீரர்கள் சொதப்பினால் வெற்றி வராது

ஊக வணிகம் ஒழிந்தது, நிலம் விலை வீழ்ச்சி என சில விஷயங்கள் நடந்தன‌

அயல்நாடுகளில் இந்தியா சில விஷயங்களை செய்தது, இது தாலிபான்கள் ஆட்சி அல்ல, நாங்கள் மோசமான ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உலகிற்கு சொல்லிகொண்டார்கள்

இந்த அரசின் மகா முக்கியமான நல்ல விஷயம் ராமர் கோவிலை கட்டாதது, பெரும் கலவரங்கள் ஏற்படாமல் பார்த்து கொண்டது இன்னபிற‌

பாரதியினை கொண்டாடிய, கலாமினை பெருமைபடுத்திய, சோழர்கள் பெருமையினை சொன்ன சுருக்கமாக முதன் முதலாக ஒரு பிரதமர் தமிழகதின் அடையாளங்களை சொன்னதெல்லாம் வரவேற்கதக்கது

ஆட்சியின் மறுபக்கம் எப்படி இருந்தது?

உண்மையில் இந்த அரசு வந்தவுடன் அந்நிய முதலீடுகள் குறைந்தன, அதற்கேற்றார் போல் மாட்டுகறி மண்ணாங்கட்டி என காவி தாலிபானிசம் பேச ஆரம்பித்தார்கள்

இவர்கள் ஒருமாதிரி என்பதால் முதலீட்டாளர்கள் தயங்க பொருளாதாரம் வீழ்ந்தது, பொருளாதாரம் வீழ தொடங்கினால் கரன்சி உயரும்

அதை மறைமுகமாக பதுக்கலை தடுக்கின்றோம் பேர்வழி என சொல்லி கருப்புபண ஒழிப்பு என சொல்லி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி 2000 ரூபாய் நோட்டை கொண்டுவந்தார்கள்

யாராவது ஆயிரம் ரூபாய் பதுக்க வசதியானது என இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வருவார்களா? இவர்கள் கொண்டுவந்தார்கள்

ஜிஎஸ்டி எனும் சிக்கலான வரிமுறையினை மேலும் சிக்கலாக்கினார்கள்

கச்சா எண்ணெய் சரிந்த நிலையிலும் இங்கு விலை குறையாதது அல்லது குறைக்க தெரியாதது என பெரும் சிக்கலை எதிர்கொண்டார்கள், கடைசி வரை அதை தீர்க்க தெரியவில்லை

மாட்டுகறி, சமஸ்கிருதம் இன்னும் ஏராளான நேரடி மறைமுக ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்களை திணித்தது இந்நாட்டின் மறக்கமுடியாத வடுக்கள்

வட இந்தியாவின் மிக சில பகுதிகளுக்குரிய கலாச்சாரத்தினை பண்பாட்டினை இந்தியா முழுமைக்கும் திணிக்க விரும்பியது நிச்சயம் சரி அல்ல‌

காந்தி பெரும் இந்திய‌ விரோதியாகவும், நேரு என்பவர் தேசதுரோகியாகவும் அனால் இவர்களோடு இருந்த பட்டேல் தியாகியாகவும் சித்தரிக்கபட்டதெல்லாம் நியாயம் அல்ல‌

மோடி தன்னை இந்துக்களுக்கு மட்டுமான பிரதமராக காட்டி கொண்டதும், மற்ற மதத்தவரிடமிருந்து தள்ளி நின்றதும் ஒரு வித அச்சத்தையும் வெறுப்பையுமே கொடுத்தன‌

இந்தியா முழுக்க குஜராத்திய வணிகர்களுக்காக திறந்துவிட பட்டதும் , எல்லா பணியும் அம்பானி அதானி என குஜராத்திகள் கைக்கே சென்றதும் பெரும் வெறுப்பை கொண்டு வந்த விஷயங்கள், இதை யாரும் மறுக்க முடியாது

மோடி என்ற மனிதரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், காரணம் அவருக்கு குடும்பம் ஏதுமில்லை , நாட்டுக்கு ஏதோ செய்ய விரும்பினார், உழைக்க விரும்பினார்

ஆனால் அமைச்சரவை கற்றவர்களாலும் சான்றோர்களாலும் அமையவில்லை

அருண் ஜெட்லி தவிர சொல்லிகொள்ள ஆளில்லை, நிர்மலா சீத்தாராமன் வெகு தாமதமாக கொண்டுவரபட்டார்

மிகபெரும் பலத்துடன் அமர்ந்த மோடிக்கு ஏற்ற அமைச்சரவை அமையவில்லை, இந்த மகேஷ் சர்மா போன்றவர்களை எல்லாம் வைத்து ஒன்றும் செய்ய முடியாது

இந்த அரசு பெரும் பலமிருந்தும் சாதிக்காமலே பதவியிறங்க அதுதான் காரணம்

மொத்தத்தில் இந்த அரசு எப்படி இருந்தது?

தேசம் எதிர்பார்த்து பெரும் பலத்துடம் அமைய வைத்த அளவு அவர்கள் செயலாற்றவில்லை

பெரும் சிக்கலை எதிர்கொள்ளவோ தீர்க்கவோ அவர்களுக்கு தெரியவில்லை, எதிர்கட்சியாக எதை எல்லாம் சாடினார்களோ அதை எல்லாம் ஆட்சியாளர்களாக திணறி அழுது கொண்டே கடந்தார்கள்

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும், இவர்களுக்கு தனிபட்ட திட்டம் அறிவு என எதுவுமில்லை அப்படியே காங்கிரஸ் அரசின் திட்டங்கள் பலவற்றை செய்ய தெரியாமல் செய்து சிக்கினார்கள்

மொத்தத்தில் இந்த ஆட்சி பெரும் மோசமுமில்லை அதற்கு வாக்கு வங்கி பயம் இருந்தது, பெரும் சாதனையுமில்லை காரணம் அதை செய்யுமளவு அறிவும் திறமையும் இல்லை

ஆனால் பொய்யும் வெற்று விளம்பரங்களும் அதிகம் இருந்தது உண்மை

ஆக‌ ஒரு வழியாக கரையேறுகின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்