என்ன செய்து நீர்வளம் பெருக்கினீர்கள்?
அண்ணன் M.m. Abdulla என்பவர் திமுகவின் இணைய பொறுப்பாளர். அவர் குரலே சமூக ஊடகங்களில் திமுகவுக்கான அதிகார பூர்வகுரல்
திமுகவினை தற்காக்கவே அவர் முகநூலில் இயங்குகின்றார்
நல்லது, மபொசியின் பதிவு தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அதாவது மபொசி குடகு பகுதியினை கோரவில்லை, இடுக்கியினை கேட்கவில்லை, இந்தியாவின் கைகூலி, அந்நிய மாநிலங்களை அண்டிபிழைக்க வைத்தவர் என பல கேள்விகள்
நாமும் சில வாதங்களை வைக்கலாம்
குடகு எனப்படும் பகுதி கூர்க் மக்கள் பகுதி, அவர்கள் தனி இனம் என்றும் தனி மாநிலம் வேண்டுமென்றும் தெலுங்கானா போல கேட்டுகொண்டிருந்தவர்கள், அந்த குடகு தனி மாநிலமானாலும் தமிழகத்தோடு இணையுமா?
இல்லை கூர்க் மக்களே தமிழகத்தோடு இணைய அன்று தயாராக இல்லை எனும்பொழுது எப்படி இணைப்பார்கள்?
அதுவும் கிருஷ்ணராஜசாகர் எல்லாம் கட்டபட்ட நிலையில் குடகினை மீட்டிருந்தால் காவேரி சிக்கல் வந்திருக்காது என்பதெல்லாம் அப்பட்டமான பொய்
சரி கபினி ஹேமாவதியில் கன்னடன் அணைகட்டியது போல பவானி அமராவதியில் தமிழகம் கட்டியிருக்கின்றது, தஞ்சை பகுதிக்கு அதில் உரிமை உண்டு
ஆனால் கொடுக்கமுடியுமா? தமிழகமே இங்கு நீர் கொடுக்காது அய்யா
அதென்ன இடுக்கி, வண்டிபெரியர் சிக்கல்?
அன்று தமிழகத்தோடு இணைய இரு பகுதிகளில் ஒன்றைத்தான் கேரளா வாய்ப்பு கொடுத்தது
ஒன்று தேவிகுளம் பீர்மேடு பகுதி இன்னொன்று கன்னியாகுமரி பகுதியும் செங்கோட்டை தாலுகாவும்
இதில் எது தமிழகத்துக்கு அனுகூலம் என்றால் நெல் முப்போகம் விளையும் கன்னியாகுமரி முதல் வாய்ப்பாக இருந்தது
விட்டுகொடுக்காமல் அரசியல் இல்லை, தமிழக அரசின் செயலிலும் அரசியல் இருந்தது. கன்னியாகுமரியினை செங்கோட்டையினை பெற்று தேவிகுளம் பீர்மேட்டை விட்டு கொடுத்தோம்
இன்னொன்று குமரியில் பெரும் கலவரம் வெடித்தது ஆனால் தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு எல்லாம் அமைதி
மக்கள் விரும்பாத போராட்டம் நடக்கா பகுதியினை எப்படி இணைப்பீர்கள்?
சென்னையிலும் போராட்டம் வெடித்ததால் அது தப்பியது திருத்தணியும் அப்படியே
சரி ஒன்றே ஒன்று கேட்கின்றோம்
மபொசி யாரின் கைகூலியாகவும் இருக்கட்டும், இந்த மொழிவாரி பிரிவினையின் பொழுது தமிழக பகுதிகளை மீட்க திமுக என்ன போராடிற்று?
சென்னை மீட்க?
கன்னியாகுமரி மீட்க?
திருத்தணி மீட்க? இல்லை சத்தியமாக இல்லை
சரி இன்று இவ்வளவு பேசும் திமுக குடகு இணைக்க அல்லது வயநாட்டை இணைக்க என்ன போராட்டம் நடத்திற்று?
மபொசி தன்னால் முடிந்ததை செய்தார் ஆனால் திமுக என்ன செய்தது?
இந்தி எதிர்ப்புக்கு 100 பேரை பலிகொள்ளும் அளவுபொங்கிய திமுக, எல்லை மீட்புக்கு என்னய்யா செய்தது?
சிறிய பூசனிசெடி பெரும் காய்களை காய்ப்பது போல மபொசி போராடினார், ஆனால் மாபெரும் ஆலமரமான திமுக என்ன செய்தது?
சொல்வீர்களா? ஒரு ஆதாரம் காட்ட முடியுமா?
தமிழகம் அண்டை மாநிலங்களை நம்பி நீருக்கு இருக்குமளவு இந்தியா சதி செய்தது என்கின்றீர்கள், இந்த பூகோள அமைப்பில் வேறு என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?
சரி திமுக ஆட்சியில் சென்னையில் எவ்வளவு குடிநீர் ஆதாரம் அதாவது புழல், பூண்டி போல உருவாக்கபட்டது? எவ்வளவு ஆறுகள் சுத்தபடுத்தபட்டன
காவேரி ஒன்றுதான் சிக்கல் அதுவும் துணையாறுகளான பவானி, அமராவதி, நொய்யல் எல்லாம் இங்குதான் ஓடுகின்றன , தஞ்சைக்கு திறந்துவிட்டீர்களா?
என்ன செய்து நீர்வளம் பெருக்கினீர்கள்?
சரி விஷயத்துக்கு வருவோம்
மபொசி தேவை இல்லாத ஏரியாவுக்கு போராடினார் என்றால், சென்னையும் உங்களுக்கு தேவை இல்லாததாக இருக்கட்டும்
ஆனால் தேவை உள்ள இடங்களுக்கு திமுக ஏன் போராடவில்லை?
பாமரன் மபொசியே பெரும் ஆர்ப்பாட்டம் செய்து சில இடங்களை மீட்க முடிந்தது என்றால் பெரும் கட்சியான திமுக ஏன் துறுதுரும்பும் கிள்ளவில்லை?
ஏனய்யா ஏன்?
மபொசி முடிந்த அளவு போராடினார், சரி இந்த பாலாறு சித்தூர் வயநாடு இடுக்கி குடகு எல்லாம் திமுக ஏன் மீட்கவில்லை?