என்ன பைத்தியகார இயக்கம்?

மக்களுக்கான இலக்கியம், மானிட நேயம் இன விடுதலை இவற்றுக்கான ஆதார தளமாய் அக்கால சோவியத் யூனியன் இருந்தது

அது உலகெல்லாம் நாத்திகமும், இனவாத கருத்துக்கள் மானிட நேயத்துடன் , உண்மையான விடுதலை உணர்வுடன், அரசியல் கலப்பின்றி இருந்தால் வாரி அணைத்தது

அது கியூபாவில் அணைத்தது, சீனாவில் அணைத்தது, வடகொரியாவில், ஆப்ரிக்காவில் என உலகின் எல்லா மக்கள் இலக்கியங்களையும் வரவழைத்து கொண்டாடியது

அப்படிபட்ட சோவியத் இலக்கிய அணியிடம் மார்க்ஸிம் கார்க்கியின் வாழும் வடிவங்கள், டால்ட்ஸ்டாயின் சித்தப்பா பேரன்கள் எழுதியது என திராவிட இலக்கியங்களை சமர்பித்தார்கள்

அக்கால வல்லரசு என்பதால் திராவிட பின்னணியினை ஆய்ந்தது சோவியத்

ஆய்ந்துவிட்டு அலறி உட்கார்ந்தது, அவர்கள் இந்த முடிவுக்குத்தான் வந்தார்கள்

“நாத்திகம் என்கின்றார்கள் ஆனால் இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் தொடுவதில்லை, பொதுவுடமை என்கின்றார்கள் சிகப்பு சட்டை இல்லை பூரா பயலுக்கும் கோடிகணக்கில் சொத்து

இது என்ன யழவு இயக்கம், இது என்ன கருமாந்திர கொள்கை? ரஷ்ய மொழியினை விட கடினமானதாக இருக்கின்றது இவர்கள் நடவடிக்கை, அட இந்தியாவினை எதிர்ப்போ என்கின்றார்கள் இந்திராவுடன் கை குலுக்குகின்றார்கள்.

என்ன பைத்தியகார இயக்கம்?

உண்மையான விடுதலை குணமோ, உண்மையான மானிட குரலோ இவர்களிடம் இல்லை, பூராவும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆபத்தான இயக்கம் இது
இவர்களையும் இவர்கள் இலக்கியங்களையும் கையிலே எடுக்க கூடாது..” என முடிவெடுத்தது

உண்மையான மக்கள் பங்காளன் என காமராஜரை அது வரவேற்று அணைத்தது, உண்மையான மானிட நேயன் என ஜெயகாந்தனை அது ஆதரித்தது

அண்ணா, கருணாநிதி மற்றும் திராவிட குப்பைகளை அது ஏறேடுத்தும் பார்க்கவில்லை

ஆனால் அமெரிக்கா கண்டது, அட இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் நம் நண்பர்கள் அல்லவா என அணைத்தது

அப்படித்தான் அண்ணா டாக்டரனார், அண்ணாவுக்கு அமெரிக்க மருத்துவர் மில்லர் ஓடி வந்தார்

அடிக்கடி அமெரிக்க தூதரும் பிரிட்டிஷ் தூதரும் திமுகவினரை சந்திக்கும் மர்மம் அதுவே, அது அமைதிபடை காலத்தில் திமுகவின் அப்பட்டமான இந்திய எதிர்ப்பில் தெரிந்தது இன்னும் பல இடத்தில் தெரிந்தது

அந்த மாபெரும் மக்களாட்சி சமத்துவ பூமியான சோவியத் ஒன்றிய குப்பை என ஒதுக்கிய திராவிட எழுத்துக்களை , இந்தியாவில் குழப்பம் ஏற்டுத்தும் திமுக என அமெரிக்கா கொண்டாடிய எழுத்துக்களை அமேசான் ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம்?

அமேசான் அப்படித்தான் செய்யும்

உலக வரலாற்றையும் இலக்கிய வகைகளையும் , அதில் இருக்கும் உலக அரசியலையும் பார்த்துவிட்டு இப்பக்கம் வந்தால் திமுக அழிச்சாட்டிய இம்சைகள் அமேசானில் குதிக்க வைக்கபடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல, அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்