என்ன வரலாற்று திரிபு இது?
என்னது பெரியாரும் அண்ணாவும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையினை கட்டவில்லையா?
வெள்ளையன் கட்டினானா?
சென்னையின் முதல் சாலையினை கலைஞர் அமைக்கவில்லையா? முதல் வங்கி கல்லூரி பள்ளி எல்லாம் அண்ணாவும் கலைஞரும் 400 ஆண்டுக்கு முன்பே திறக்கவில்லையா?
என்ன வரலாற்று திரிபு இது?
சென்னைக்கு கோட்டைகட்டி வெள்ளையனை அழைத்து வந்து அதை உருவாக்கி பின்பு சென்னை மாகாணம் என பெரும் திராவிட நாடு அமையபாடுபட்டவர் பெரியார்
கிளைவ் டூப்ளே யுத்தத்தை நிறுத்தி சென்னையினை வளர செய்வதவர் அண்ணா
அதன் பின் இரண்டாம் உலகபோர் காலத்தில் ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பலை விரட்டிவிட்டு கோட்டையில் கொடியேற்றும் உரிமை பெற்றார் கலைஞர்
இந்த பாசிச மோடி அரசு திராவிட வரலாற்றை, இனமான தமிழன் வரலாற்றை மாற்றி வெள்ளையன் கோட்டை கட்டினான் சென்னையினை உருவாக்கினான் என மோசடி செய்கின்றது
சென்னையில் முதல் கப்பல் விட்டது அண்ணாவும் அன்பழகனும் நெடுஞ்செழியனும், திராவிட கப்பல் அது
சென்னை ரயில் நிலையம் நீதிகட்சியின் பிரமுகர்களாலும் விமான நிலையம் திராவிட கழகத்தாலும் அமைக்கபட்டது
இப்படி திராவிட நாட்டு சாகச வரலாறு ஏகபட்டது இருக்க அதை அடிமை பழனிச்சாமி அரசுடன் மறைக்க நினைக்கும் பார்ப்பானிய இந்துத்வ ஆரிய கொடுமை அரசான மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்