என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு

Image may contain: 1 person, smiling

என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு

அவர் தெருவில் நடந்துசெல்வார், ஒரு சிறுவன் கல்லை தூக்கி எறிவான். தலையினை தடவிகொண்டு அந்த சிறுவனை அழைத்து 10 பைசா கொடுப்பார் கலைவாணர்

கொடுத்துவிட்டு சொல்வார், ” எனக்கும் என் நண்பருக்கும் குறிபார்த்து எறிபவனை ரொம்ப பிடிக்கும், என் நண்பர் அடுத்துவருவார் சரியாக எரியவேண்டும் , உன் எறி பிடித்திருந்தால் அவரும் உனக்கு காசு தருவார்” என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்

அச்சிறுவனும் பின்னால் வரும் மாமிச மலை மீது பெரிய கல்லை எறிந்துவிட்டு, அவன் ரத்தம் வழிய நிற்கும்பொழுது சென்று “எப்படி என் எறி? ம்ம் காசு கொடுங்கள்..” என கேட்பான், பயில்வான் பிய்த்து எறிந்துவிடுவான்

இன்று கார்ட்டூனிஸ்ட் பாலா அடித்து கைது செய்யபட்டபொழுது கலைஞர் அன்று எப்படி என்.எஸ் கிருஷ்ணன் பாணியில் கடந்து சென்றிருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அன்று ஏதோ தான் சாகசம் செய்ததாக நினைத்த பாலா இன்று சிக்கியிருக்கின்றார்