எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி
ஒரு விஷயத்தை கவனித்தால் உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும், திமுக தன்னை மாநில கட்சியாக கருதவில்லை மாறாக தேசிய கட்சிபோலவே தேசிய அரசியல் செய்கின்றது
யாரோ அந்த அப்பாவி மான்குட்டியினை நீ ஒரு சிங்கம், நீ ஒரு புலி என சங்கிலிகட்டி இழுத்து செல்கின்றார்கள், அதுவும் ஆம் நானே சிங்கம் என உண்மை தெரியாமல் சென்றுகொண்டிருக்கின்றது
அரசியலில் தேசிய அரசியல் செய்ய நேரமுண்டு அது மத்தியில் பலமில்லா அரசு இருக்கும் பொழுது செய்வது
மாறாக மாநிலத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் கோட்டைவிட்டு, தன் அனுபவத்திலும் பாரம்பரியத்திலும் நூறில் ஒரு பங்கு கூட இல்லா பழனிச்சாமியினை விட்டுவிட்டு ஏ டெல்லியே என சீறுவது பழனிச்சாமிக்கே ஆதாயம்
பழனிச்சாமிக்கு மிகபெரும் நிம்மதியினையும் ஆறுதலையும் திமுக கொடுத்துவிட்டு தேசிய அரசியலுக்கு நகர்வது அதிமுகவினருக்கு பெரும் சாதகமே
குட்கா ஊழலை கூட திமுக மறந்துவிட்டதை பலர் கவனித்திருக்கலாம்
திமுகவினை அழிப்பது எப்படி என்ற பெரும் திட்டத்தோடு யாரோ சகுனி போல ஊடுருவியிருக்கின்றார்கள்
அவர்கள் சிங்கம் என சொல்லி ஒரு மான்குட்டியினை எங்கோ இழுத்துசென்று பலிகொடுக்க போகின்றார்கள், பப்பாளி மரத்தில் சர்வாதிகாரியினை கொடிமரம் என ஏற்றிவிடுகின்றார்கள்
எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி
விரைவில் அதிமுக அலுவலகத்தில் ஜெயா பக்கத்தில் திமுக சர்வாதிகாரிக்கும் சிலை திறந்து கண்ணீர்விடுவார்கள், காரணம் அதிமுக நிலைத்திருக்க அவர் செய்திருக்கும் செய்து கொண்டிருக்கும் உதவி கொஞ்சமல்ல