எம்.ஜி ராமசந்திரனின் தாய்வழி வீட்டினை சீரமைக்கின்றனர்
கேரளாவில் எம்.ஜி ராமசந்திரனின் தாய்வழி வீட்டினை அதிமுகவினர் பலலட்சம் செலவில் சீரமைக்கின்றனர்
ராமசந்திரன் பிறந்தது இலங்கையில், வளர்ந்தது கும்பகோணத்தில். அந்த கும்பகோணத்தில் இன்னும் அந்த வீடு உண்டு. ராமசந்திரனே வாங்கி “அம்மாடா.. தெய்வம்டா…, சத்ய பாமாடா ” என சொல்லிகொண்டிருந்தார்
இப்பொழுது அவர் அன்னையின் அம்மா வீட்டையும் புணரமைக்கின்றார்களாம்
அப்படியே ராமசந்திரனின் முதல் மனைவி சதானந்தவதியின் கல்லறை பாலக்காட்டில் உண்டு, அதில் தாஜ்மஹால் போல ஏதும் கட்டுவார்களோ என்னமோ?
பிடல் காஸ்ட்ரோவும், சிங்கப்பூரை உருவாக்கிய லீகுவானும் தங்கள் காலத்திற்கு பின் இந்த சிலை வைத்தல் நினைவு ஆலயம் ஏதும் இருக்க கூடாது என சொல்லிவிட்டுத்தான் செத்தார்கள்
பெரும் புரட்சி செய்த அவர்களுக்கே அங்கு துளியும் அடையாளமில்லை
இங்கே பிராடு தலைவனின் ரமாவரம் தோட்டம் முதல், கும்பகோணம் வீடு, அவரின் முப்பாட்டி வீடுவரை விழுந்து விழுந்து கவனிக்கின்றார்கள்
இலங்கை கண்டிக்கும் சென்று எங்கே எங்கள் தெய்வம் பிறந்த இடம், அங்கே பெரும் ஆலயம் கட்ட வேண்டும் என அவர்களுக்கும் பெரும் ஆசைதான்
நல்ல வேளையாக கண்டி இலங்கை அரசிடம் இருக்கின்றது, இவர்கள் கோவில் கட்ட சென்றால் தொலைத்துவிடுவார்கள்
(எனினும் இந்த சைதை துரைசாமி கோஷ்டிக்கு ஜெயலலிதாவின் தாத்தா ராகவாச்சாரி வாழ்ந்த வீடோ, இல்லை ஜெயலலிதாவின் தந்தை வாழ்ந்த இடமோ கண்ணுக்கு தெரியவில்லை என்பதுதான் மகா சோகம்.)