எம் பதிவினை எடுத்து அவர்கள் பதிவு போல் போட்டுகொள்கின்றார்கள்
எம் பதிவினை எடுத்து அவர்கள் பதிவு போல் போட்டுகொள்கின்றார்கள், ஏதும் சொன்னால் ஆக்ரோஷமாக திட்டுகின்றார்கள்.
இனி வியாசர் வந்தாலே ஜெயமோகனின் அடிபொடிகள் பாரதம் எழுதியது ஆசான் என்பார்கள், ராஜராஜசோழன் வந்தாலே தஞ்சை கோவிலை அவனுக்கு கொடுக்கமாட்டார்கள்
ஷாஜகான் வந்து தலைகீழாக நின்றாலும் தாஜ்மஹால் அவன் உரிமை ஆகாது
விஷயத்தை உலகுக்கு கொடுப்பதோடு ஒருவனின் கடமை முடிந்துவிடுகின்றது
அப்படிபட்ட இந்த உலகில் நாமெல்லாம் எம்மாத்திரம், ஆயினும் அந்த பரிதாபத்துகுரிய ஜீவன்கள் அவர்களின் குழந்தைகளையாவது சொந்தமாக பெற்று கொள்ளட்டும்