எம்.பி பென்சன் வேண்டாம் : சரத்குமார்

Image may contain: 1 person, sunglassesஎம்.பி பென்சன் வேண்டாம் என சொல்லிவிட்டார் சரத்குமார்

அதாவது திமுகவில் இருந்தபொழுது 2001ல் அவரை மேல்சபை எம்பியாக்கினார் கலைஞர். அவ்வகையில் சரத்திற்கு மாதம் பென்சன் 20 ஆயிரம் கிடைத்தது

இப்பொழுது சரத்குமாருக்கு நாட்டுபற்று அதிகமாகிவிட்டது, பெரும்பாலான மக்கள் சிலிண்டர்களை விட்டுகொடுப்பது இன்னும் ராணுவ வீரர்கள் பென்சனுக்கு போராடுவது எல்லாம் அவரின் தேசபற்றை சீண்டி பார்த்தன‌

எனக்கு தேவையான பணம் இருக்கின்றது, பென்சன் வேண்டாம் நாட்டிற்கு பயன்படட்டும் என சொல்லிவிட்டார் சரத்குமார்

ஒருவகையில் வாழ்த்தவேண்டிய விஷயம், பாராட்டலாம்

ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்த வருமானவரி சோதனைக்கு முன்னால் இப்படி தியாகம் செய்திருந்தால் அதிகம் பாராட்டியிருக்கலாம்

எப்படியோ வருமானவரி சோதனைக்கு பின்பாவது சரத்குமாருக்கு நாட்டுபற்று கூடியிருப்பது நல்ல விஷயம்.