எர்டோகன் இப்பொழுது இந்தியாவோடும் உரசுகின்றார்

ஒரு காலத்தில் உலகை மிரட்டிய வல்லரசு துருக்கி பின்பு ஆளாளுக்கு அடித்து நொறுக்கிபோட்டார்கள், மங்கோலியா சிரியா போல் ஆகியிருக்கவேண்டிய தேசம் அது எனினும் கமால் பாட்சா எனும் மாமனிதன் அந்த துருக்கியினை சீர்படுத்தினான்

ஐரோப்பாவின் நோயாளி என ஒதுக்கபட்ட தேசம் அவனால் ஓரளவு எழும்பியது பின் இந்த பனிபோர் காலத்தில் அதன் அமைவிடம் காரணமாக அது நேட்டோ வரை சென்றது

இப்பொழுது அதன் அதிபராகியிருக்கும் எர்டோகன் பழைய துருக்கி மன்னர் வாரிசு போல் ஆட்டம் போட தொடங்கியிருக்கின்றார்

இவரை முன்பே ராணுவபுரட்சி மூலம் அடக்கிவைக்க அமெரிக்கா செய்த முயற்சிகள் தோற்றன அதன் பின் அமெரிக்காவுக்கு தலையும் ரஷ்யாவுக்கு வாலையும் காட்டும் நபராகிவிட்டார்

சிரியாவில் அவர் புகுந்ததும் ரஷ்யா வந்து தடுத்ததும் அதில் மனிதர் வெறுத்து போனதும் உலகறிந்தது

அந்த எர்டோகன் இப்பொழுது இந்தியாவோடும் உரசுகின்றார், காஷ்மீர் தகராறை கையில் எடுத்து ஆடும் அவர் இப்பொழுது பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிக்கபடும் என்கின்றார்

பாகிஸ்தான் துருக்கி ஆகுமோ இல்லையோ, துருக்கி பாகிஸ்தானாக ஆகாமல் இருந்தால் சரி.

நடக்கும் விஷயங்களை டிரம்பும் பார்த்துகொண்டிருக்கின்றார், விவகாரம் பெரிதானால் ஐரோப்பிய யூனியனில் இருந்தும் நேட்டோவில் இருந்தும் துருக்கி நீக்கபடலாம் அதன் பின் துருக்கி நிலை சிக்கலாகும்

காட்சிகள் வித்தியாசமாக நடக்க தொடங்கியிருகின்றன‌, இந்தியாவினை லேசாக சீண்டுகின்றார் எர்டோகன் , இம்ரான்கானுடன் வேறு நெருங்குகின்றார்

ஆக தமிழக போராளிகளுக்கு இம்ரான் கானை தொடர்ந்து துருக்கி அதிபரும் கிடைத்துவிட்டார்

இனி இவர்களை அவர் ஆதரிப்பார், இவர்கள் அவரை ஆதரிப்பார்கள் நடக்கும் காட்சிகள் படு தமாஷாக இருக்கும், பார்க்கலாம்