எல்லாவற்றிலும் வைரமுத்துவுக்கு சனி அமர்ந்திருக்கின்றார்

நாக்கில் மட்டுமல்ல ஜாதகத்தின் எட்டு கட்டம் மற்றும் கிடைக்கும் மைக் என எல்லாவற்றிலும் வைரமுத்துவுக்கு சனி அமர்ந்திருக்கின்றார்.

பாலசந்தருக்கு பிறந்தநாள் என சென்று எதையோ உளறிகொட்டியிருக்கின்றார் வைரமுத்து

அதாவது இளையராஜாவுக்கு எதிராக 37 இசை அமைப்பாளருடன் இயங்கி பார்த்தாராம், கடைசியில் ரகுமானோடு சேர்ந்துதான் வென்றாராம்

அன்னார் என்ன சொல்கின்றார் என்றால் ரகுமானை இவரிடம் கொண்டுவந்து சேர்த்து வாழ்வளித்தது பாலசந்தராம்

37 இசை அமைப்பாளரும் வேஸ்ட் என்பது போல் பேசியிருக்கின்றார் மனிதர்..

மனிதருக்கு சின்மயி அடித்த அடியில் மறை கழன்றுவிட்டது போல‌

இவரை ரகுமானுடன் சேர்த்தது நிச்சயம் மணிரத்னம். அந்த சின்ன சின்ன ஆசை பாடலும் ரோஜா படத்து இசையுமே ரகுமானுக்கு மாபெரும் அஸ்திவாரம் அமைத்தது

அதில்தான் ரகுமானின் சாம்ராஜ்யம் கட்டபட்டது

ஆக பாலசந்தரை விட மணிரத்னமே வைரமுத்துவுக்கு நன்றி இருந்தால் நினைவுபடுத்தபட வேண்டியவர்

பாடல் என்பது கூட்டு முயற்சி, கவிஞனும் இசைநாதனும் இணைந்து செய்யும் படைப்பு, அதில் தனிபட்டு பெருமை கொள்ள ஏதுமில்லை, இரண்டில் ஒன்று சொதப்பினாலும் பாடல் சரியாக வராது

இதில் ஏதோ சந்திரகுப்தனை உருவாக்கிய சாணக்கியனை போல தன்னை வைரமுத்து நினைத்து கொள்வது சரியல்ல..

ரோஜா படத்தை கவிதாலயா தயாரித்தாலும் இசை அமைப்பாளராக ரகுமானை அழைத்து வாய்ப்பு கொடுத்தது மணிரத்னம் என்பவரே

சரி மணிரத்னம் பற்றி ஏன் வைரமுத்து ஒன்றும் சொல்லவில்லை, ஒருவேளை மணிரத்னம் மருத்துவமனைக்கு செல்லும் நாளுக்காக காத்திருப்பாரோ?