எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை
யூதருக்கும் அரேபியருக்கும் ஒரே மாதிரியான அடையாளம் இருந்தது, அதாவது அவர்களும் மீசை தாடி, குல்லா ஜெருசலேம் நோக்கி தொழுதல், சுன்னத் என ஏக ஒற்றுமைகள் இருந்தன
யார் இஸ்லாமியர், யார் யூதன் என கண்டுபிடிக்கமுடியா அளவு சிக்கல் இருந்த நேரம், இஸ்லாமியரை அடையாளபடுத்த புதுவழி கண்டார்கள்
விஷயம் ஒன்றுமில்லை, மீசையும் தாடியும் வைத்தால் யூதன், மீசையின்றி தாடி மட்டும் வைத்தால் இஸ்லாமியன்
ஜெருசலேம் நோக்கி தொழுதால் யூதன், மெக்கா நோக்கி தொழுதால் இஸ்லாமியன்
சிக்கல் தீர்ந்து இன்றுவரை அந்த நல்ல முடிவு தொடர்கின்றது
இந்துமதம் அன்று உயிர்பலி செய்துகொண்டிருந்தது பசு முதல் குதிரை வரை ஏன் மனிதன் வரை வெட்டி அக்கினி குண்டத்தில் பலிகொடுத்துகொண்டிருந்தார்கள்
ஏன் சிவபெருமானே பிள்ளைகறி கேட்டு உண்டிருக்கின்றார்.
புத்தமும் சமணமும் கொல்லாமை போதித்து ஓங்கி வளர்ந்தன, அது உயரிய தத்துவமாயிற்று
சங்கரரின் எழுச்சிக்கு பின் இந்துமதம் தன்னை சீர்படுத்தியது, கொல்லாமை எனும் தத்துவத்தை தன் தத்துவமாக மாற்றிகொண்டது
அதிலிருந்துதான் சைவ உணவு எனப்படும் வழக்கம் இந்து கலாச்சாரமாக மாறியதே அன்றி ஆரம்பத்திலிருந்து அல்ல
விதிவிலக்கான உணவுகள் எல்லா மதத்திலும் உண்டு, இயேசுநாதரிடம் கூட கேட்டார்கள், அசுத்த உணவினை உண்ணலாமா?
அவர் சொன்னார் “வெளியிலிருந்து உள்ளே போகும் எதுவும் மனிதனை தீட்டுபடுத்தாது, மாறாக மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைதான் ஆபத்தானவை”
ஆம், எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை. அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
மாட்டுகறிக்காக மனிதனை தாக்க கிளம்பும் கும்பலை தமிழகத்தில் முதலிலே கிள்ளி எறிதல் நலம்