எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே

“உங்கள் நாட்டில் பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள்.

அம்மா என அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப கேட்கின்றார்கள்

நான் பொறுமையாக சொன்னேன், உங்கள் நாட்டில் இந்த கிறிஸ்தவ சன்னியாசிகள் உண்டல்லவா? அப்படி இந்து சன்னியாசி நான்

எங்கள் நாட்டில் சன்னியாசிகள் எல்லா பெண்களையும் தாயே என்றுதான் அழைப்போம், அது வயதான பெண் என்றாலும் சரி, சின்னஞ்சிறிய மகவு என்றாலும் சரி

எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே..

பெண்களை அம்மா எனவும் தாயே எனவும் அழைக்கும் மிகபெரிய தர்மம் எங்கள் தர்மம், அந்த மாபெரும் சிறப்புமிக்க பூமியில் இருந்து வந்திருக்கின்றேன்”

: சிகாகோ உரையில் சுவாமி விவேகானந்தர்