எல்லா முன்னேறிய நாடுகளிலும் அடையாள அட்டை உண்டு…
எல்லா முன்னேறிய நாடுகளிலும் அடையாள அட்டை உண்டு, அது முற்காலத்திலே அங்கு உண்டு
விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் கார்டுகளுக்கு மாறிவிட்டார்கள், அந்நாட்டு குடிமகனின் ஜாதகமே அதில் இருக்கின்றது
கார்டை சொருகி பட்டனை தட்டினால் போதும், அவன் கடன் தொகை முதல் கட்டாமல் வைத்திருக்கும் போக்குவரத்து சமன் வரை காட்டிகொடுத்துவிடும்.
ஒரு குடிமகனின் தரவுகளை தெரிந்து கொள்ள மிக பெரும் விஷயம் இந்த கார்டுகள்
இந்தியாவில் அப்படி இல்லை என்றாலும், இப்பொழுதுதான் ஆதார் கார்டு முறைக்கே வந்திருக்கின்றார்கள், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது
நீ இந்திய குடிமகன், இதோ உன் கார்டு இதனை எல்லா விஷயத்திற்கும் பயன்படுத்து என்றால், அய்யய்யோ என்னை அரசு கண்காணிக்கின்றது என பெரும் ஒப்பாரி
“நீ இந்நாட்டு குடிமகன், உன்னை இந்த நாடு கண்காணிக்காமல் அமெரிக்கனா வந்து கண்காணிப்பான்?, முறையாக பயன்படுத்தும் பட்சத்தில் என்ன சிக்கல்?
கள்ளவேலை செய்பவனே அஞ்ச வேண்டும், நல்ல இந்தியன் ஏன் அஞ்ச வேண்டும்.”
நாட்டு நிர்வாகமும் இன்ன பிற விஷயங்களும் வேகமாகவும், துல்லியமாகவும் இயங்க இது மகா முக்கியம் அல்லவா?
காவல்துறை முதல் பத்திர துறை போன்ற மகா முக்கிய துறைகளில் இதனால் எவ்வளவு பழு குறையும், தரவு துல்லியமாகும்
முறையான நிர்வாகத்திற்கும் இன்னும் தீவிரவாத தடுப்பு முதலான விஷயங்களுக்கும் அது மகா அத்தியவாசியம்
அவசியம் என்பதை விட காலமாற்றம், அது நடந்தே தீரும்
அதற்கு இங்கு ஆயிரம் ஒப்பாரிகள், அது பாதுகாப்பனாது அல்ல, அம்பானி திருடிவிட்டார், மத்திய அரசு திருடிவிட்டது என சர்ச்சைகள்
எல்லா நாட்டிலும் இப்படித்தான் அட்டை வைத்திருக்கின்றார்கள், எல்லா நாட்டிலும் இதன் மூலம்தான் விவரங்கள் கையாளபடுகின்றன, அங்கெல்லாம் இல்ல்லா நிலை இங்கு மட்டும் சிக்கலாம்
ஏதாவது சொல்லி இங்கு ஓலமிடவேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு நோக்கமில்லை. அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களின் கடமை
அந்தந்த நாடுகள் பாஸ்போர்ட்டுக்கு பதில் கார்டு கொண்டுவந்துவிடலாமா, சிப் போதுமா? என்ற ரீதியில் ஆய்வுகளில் இருக்கின்றன
விரைவில் பாஸ்போர்ட் புத்தகம் இல்லா நிலையும் அதனை கார்டுகளும் , சிப்களும் பிடிக்கும் நிலை வரலாம்
ஆனால் அருமை இந்தியா ஆதார் கார்டுக்கே அழுகின்றது, பின் எங்கிருந்து முன்னேறும்???