எல்லோருக்கும் விருப்பமான குழந்தை ஷாமிலி
1990களில் எல்லோருக்கும் விருப்பமான குழந்தை ஷாமிலி, எல்லா குடும்பமும் அவளை போன்ற குழந்தையினையே விரும்பின

குண்டு மாம்பழம் போன்ற அந்த முகமும், துறுறுவென வண்டாக மொழி பேசிய கண்களும், அந்த அத்திபழம் போன்ற கன்னமும் கொஞ்சும் மொழியும் அக்குழந்தை தெய்வத்தின் சாயல் என்றே கொண்டாடபட்டது
இரட்டை குடுமியில் அந்த முகத்தை காணும்பொழுது இரு திரி எரியும் தீபம் விளக்கு போல மின்னியது அந்த முகம்
அஞ்சலி படத்துக்கான தேசிய விருதை அக்குழந்தை பெற்றபொழுது அடுத்த சாவித்திரி அதுதான், ஆண் கமலஹாசன் அதுதான் என ஆளாளுக்கு ஆருடம் சொன்னார்கள்
அஞ்சலி படத்து குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் பின்னாளில் நடிகர்களாக முயற்சி செய்து ஒதுங்கிவிட்டன, பல முகங்களை காணவே இல்லை
ஷாமிலியும் களைத்து ஓய்ந்து ஒதுங்கிவிட்டார்
குட்டி பத்மினிக்கும் ஷாமிலிக்கும் ஒரே ஜாதகம்
கமலஹாசனுக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரே ராசி
ரஜினிக்கும் அஜித்துக்கும் அதே ராசி
அன்று 10 வயது சிறுவனாக எங்கோ பதுங்கி யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருந்த, ஏன் அஞ்சலி படத்தின் சிறு வேடத்தில் கூட நடித்திராத அஜித்குமார் இன்று ஓவர் நைட்டின் துருவ நட்சத்திரமாகிவிட்டார்
ஷாமிலி திரையினை கலக்கும் பொழுது நயனும், திரிசாவும், கீர்த்திசுரேஷும் எங்கிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதெல்லாம் சினிமாவுக்கு பொருந்தாத ஒன்று
எங்கோ மண்ணுக்குள் கிடக்கும் வைரம் அரசனின் மகுடத்தில் ஏறுவதும், கடலில் ஆழகிடக்கும் முத்து சேர்வார் கையில் சிக்கும் பொழுது பொன்னுடன் நகை ஆவதும் அப்படித்தான்
ஒன்றின் தொடக்கம் அல்ல முடிவே கவனிக்கதக்கது என்பதில் அஜித்தின் வெற்றி தெரிகின்றது
எனினும் அந்த ஷாமிலி குழந்தையாகவே இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என உள்மனம் சொன்னாலும் காலத்தை கட்டுபடுத்தும் சக்தி யாருக்கு உண்டு?