எவ்வளவு தெரியுமா?
ஆமாம் நாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் , சங் பரிவார் கோஷ்டியிடமும் பணம் வாங்கி கொண்டுதான் எழுதுகின்றோம்
எவ்வளவு தெரியுமா?
கே பத்மநாபன் எனும் புலிதளபதி நாம் வசிக்கும் இடத்தின் வெகு அருகில் கைது செய்யபட்டபொழுது கூட, ராஜபக்சே மீதே தாக்குதல் நடந்த இடத்தில் அருகில் இருந்தும் கூட புலிகளுக்கு எதிராய் எழுதியபொழுது..
உலகெல்லாம் இருந்து பிரபாகரனை விமர்சிக்காதே, மீறி விமர்சித்தால் நடுதெருவில் சுடபடுவாய் என மிரட்டல் வந்தபொழுது..
உயிராபத்து உச்சத்தில் எழுதும் பொழுது…
ஆம் அப்படி எழுதும் பொழுது திமுக என்ன தொகை தந்ததோ அதை விட கொஞ்சம் குறைவு…
பிரபாகரனை வைத்து எங்களை விமர்சிக்கும் சீமானை கிழித்து விடு என பெட்டி நிறைய கொடுத்தார்கள் அல்லவா?
அதைவிட குறைவுதான்..
கலைஞரை பார்த்துவிட்டு பதிவு எழுது என சொன்னார்கள் அல்லவா? அப்பொழுது பெரும் பணம் கொடுத்தார்கள் அல்லவா? அதைவிட கொஞ்சம் குறைவுதான்
திமுகவினர் கொடுத்த அளவு இந்த ஆண்டி பரதேசி கட்சி கொடுக்கவே இல்லை..