எஸ்.வி சேகர் என்பவரின் பாஜக அக்கறை…

இந்த எஸ்.வி சேகர் என்பவருக்கு பாஜக அக்கறை பொத்துகொண்டு வந்திருக்கின்றது, தமிழிசையினை மிக மோசமாக திட்ட தொடங்கியிருக்கின்றார்

பாஜக கட்சி ஆயிரம் வோட்டு வாங்கி இருப்பதே மிக பெரும் சாதனை, அந்த சாதனைக்கு சொந்தக்காரர் தமிழிசை

தமிழிசையும் இல்லை என்றால் அக்கட்சி 10 வோட்டு கூட வாங்கி இருக்காது, அந்த நன்றியும் சேகருக்கு இல்லை

பொதுவாக தமிழகத்தில் கட்சி வளர்க்கவேண்டும் எனும் எண்ணம் பாஜகவிற்கு சுத்தமாக இல்லை, இங்கிருக்கும் பாஜகவினருக்கும் இல்லை, சும்மா பெயருக்கு ஒன்றை வைத்துகொண்டு லட்டு கொடுத்து ஏதோ காமெடி செய்கின்றார்கள்

ஆனால் அது புரியாமல் உண்மையிலே கட்சிக்கு உழைப்பவர் தமிழிசை, கிரிக்கெட்டில் கவனித்திருக்கலாம் வலுவான அணி வெற்றி நிச்சயம் என்ற நிலையில் பேட் செய்யும் சொத்தை பேட்ஸ்மேனுக்கு ஒரு மாதிரி பந்துவீசி கடுப்பேற்றும்

ஆனால் அந்த பேட்ஸ்மேனோ வெற்றி நிச்சயம் என்பது போல் மட்டையினை சுழற்றுவார், இலங்கை டெயில் என்ட் வீரர்கள் இதில் பெஸ்ட். ஆனால் பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும்

தமிழிசை அதைத்தான் செய்கின்றார்

ஆனால் எஸ்வீ சேகர் என்பவர் ஏதோ கட்சிக்கு கடுமையாக உழைத்தவர் போல தமிழிசையினை சாடுகின்றார்

அப்பொழுதும் வானதி சீனிவாசனையோ, நிர்மலா சீத்தாராமனையோ , எச்.ராசாவினையோ சாடவே இல்லை பார்த்தீர்களா? . இதுதான் பிராமண பாசம் என்பது

தமிழிசை அய்யராக இருந்திருந்தால் சாடுவாரா சேகர்?