ஏதோ மகா முக்கிய அறிவிப்பு இருக்கலாம்

பிரதமர் மோடி இன்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருக்கின்றார்

ஏதோ மகா முக்கிய அறிவிப்பு இருக்கலாம், காரணம் பிரதமருக்கு அதிகாரிகள் தெரிவித்திருக்கும் விவரம் அப்படி என்கின்றார்கள்

உள்ளே பரவிய கொரோனா தன் கொடூர விஸ்வரூபத்தை காட்ட தொடங்கும் நேரமிது, முன்னெச்சரிக்கையாக இந்தியா எல்லாம் செய்தாயிற்று

இனி கண்காணா எதிரியினை ஆடவிட்டு அடையாளம் கண்டு அடக்க வேண்டும்

ஞாயிற்று கிழமையே இதற்கான முன்னோட்டத்தை இந்தியா பார்த்துவிட்டது என்பதால் மோடியின் இன்றைய உரை அவசரநிலை பிரகடனமாக இருக்கலாம் என சில செய்திகள் குறிப்பால் உணர்த்துகின்றன‌

நாட்டுக்கு எது தேவையோ அதை பிரதமர் செய்யும்பொழுது வரவேற்க வேண்டும், பார்க்கலாம்

தமிழ்நாட்டில் ஏற்கனவே தடை உத்தரவு வந்தாயிற்று, மோடி அறிவிக்க இருக்கும் அறிவிப்பு இந்திரா காலம் போல அல்லாமல் மாநில அரசுகள் இயங்கி நாட்டை வழிநடத்தும் மட்டுபடுத்தபட்ட அவசர நிலையாக இருக்கலாம்

இன்னும் இருமணி நேரத்தில் தெரியும் விஷயம், அதுவரை காத்திருப்போம்