ஏன் அவர்கள் பெயர் இல்லை?
படகோட்டி படத்தில் நாகேஷ் மீனவர் சங்க தலைவராக இருப்பார், ஒருநாள் புயலில் சிக்கிய மீனவர் ஒருவர் காணாமல் போவார், உடனே நாகேஷ் அவர் பெயரை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டு அஞ்சலி செலுத்துவார்
இரு நாட்கள் கழித்து காணாமல் போனவர் வந்து அய்யா நான் வந்துட்டேன் என கதறுவார், நாகேஷ் சீரியசாக சொல்வார்
“என்னய்யா நீ, சங்கத்து முடிவு தெரியுமா? ஒரு தடவை பெயரை அடிச்சிட்டா அடிச்சதுதான் இனி ஒண்ணும் பண்ண முடியாது நீ கடலுக்கே போய் சாவு”
அப்படி கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் கமிஷன் அழிச்சாட்டியம் செய்திருக்கின்றது
ஏராளமான மீனவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம், பெரும் எண்ணிக்கை மீனவர்கள் அதிர்ச்சியுடன் திரும்பிவிட்டனர்
சர்ச்சை நேற்று ஓடிகொண்டிருந்தது
ஏன் அவர்கள் பெயர் இல்லை?
ஒருவேளை ஓகி புயலில் செத்தவர்கள் கணக்கில் இவர்களை எல்லாம் அன்றே சேர்த்திருப்பார்களோ?
இப்பொழுது மீனவர்கள் வாக்களிக்க செல்லும் பொழுது நாகேஷ் ஸ்டைலில் பதில் சொல்கின்றார்களோ?