ஏன் இப்படி கசியவிட்டார்கள்?

பசிபிக் கடலில் இருந்து எப் 35 விமானத்தை மீட்டுவிட்டோம் என சொன்ன அமெரிக்கா, கொஞ்ச நேரத்தில் அது உறுதிபடுத்தவில்லை என சொல்லி பின்வாங்கிவிட்டது

நேற்று அந்த விமானம் மீட்கபட்டது என பரபரப்பினை கிளப்பினார்கள், ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை கொஞ்ச நேரத்தில் இல்லை விமானம் இருக்குமிடமே தெரியவில்லை என பின்வாங்கிவிட்டார்கள்

ஏன் இப்படி கசியவிட்டார்கள்?

ஒருவேளை அமெரிக்கா விமானத்தை மீட்டது என்றதும் ரஷ்யா அல்லது சைனா “அண்ணே பொய் சொல்லாதீங்க‌ விமானம் எம்மிடம் இருக்கின்றது..” என நடிகர் செந்தில் பாணியில் சொல்வார்கள் என எதிர்பார்தார்களோ?

அந்த விமானத்தில் தரையிரங்கும் பொழுது லேண்டிங் கியர் சிக்கல் முன்பே இருந்திருக்கின்றது

இப்பொழுதும் இருந்திருக்கலாம், அதனால் கடலில் விமானத்தை இறக்கி விமானி பரிசோதித்தாரோ என்னமோ?

இனி அவர் வந்தால்தான் உண்மை தெரியும் அவரையும் காணவில்லை எனபதுதான் மர்மம்