ஏம்பா கோபிநாத், இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

Image may contain: one or more people

ஏம்பா கோபிநாத்

இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

இரட்டை இலையினை பழனிச்சாமி வெல்வாரா? தினகரன் வெல்வாரா?

சசிகலா வெளிவரும்பொழுது கட்சி இருக்குமா? இருக்காதா?

அறிவில் சிறந்தவர் பழனிச்சாமியா? இல்லை பன்னீர் செல்வமா?

டெங்கி ஒழிப்பில் முன்னால் நிற்பது மத்திய அரசா? மாநில அரசா?

ஸ்டாலினின் அரசியல் திமுகவிற்கு சாதகமா பாதகமா?

அன்புமணி அறிக்கைகளை அரசு கண்டு கொள்கின்றதா இலையா?

தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவினை நியமித்தால் கட்சி வளருமா இல்லை சரியுமா?

இப்படி எத்தனையோ தலைப்புகள் இருக்க , தமிழ்பெண் அழகா, மலையாளி பெண் அழகா என மார்க் போட கிளம்பினீராம் ஏன்?

நல்ல வேளையாக நிகழ்ச்சியினை நிறுத்தினீர் , இல்லையென்றால் ஷகிலா ரசிகர்கள் எல்லாம் எப்பக்கம் சரிய முடியும்? எவ்வளவு சிக்கலுக்கு ஆளாகியிருப்பார்கள்?