ஐசரி வேலன் வழியில் நடக்கின்றார் லாரன்ஸ்…

Image may contain: 2 people, people standing and textமாட்டுகார வேலன் என்றொரு ராமசந்திரன் படம் உண்டு, படத்தில் அவர் மாட்டை மேய்த்தார், வேறு எதனை எல்லாம் மேய்த்தார் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளவும்

அதில் ஒருவர் வருவார், அது சரி என கூட சொல்ல தெரியாது ஐசரி ஐசரி என சொல்லிகொண்டே இருப்பார், காமெடி நடிகனுக்கும் கீழான ரோல்

அப்படி ராமசந்திரனோடு நடித்தார், அப்படியே ஐசரி ஐசரி என சொல்லி தன் பெயரை ஐசரி வேலன் என்றே மாற்றினார்

பின் ராமசந்திரன் கட்சியில் சேர்ந்தார், கான்ஸ்டபிள் பங்குராஜை சத்யபாமா குழுவின் கல்வி தந்தை ஆக்கிய ராமசந்திரன், சாராய சக்கரவர்த்தி ராமசந்திர உடையாரை கல்வி தந்தை ஆக்கிய ராமசந்திரன் அப்படியே ஐசரி வேலனையும் கல்வி தந்தை ஆக்கினார்

இன்று தினகரனின் ஆர்.கே நகர் எம்.எல்,ஏ அன்று அவர்தான்

Image may contain: 1 person, smiling, close-upஇன்று பெரும் பிரமாண்டமான கல்வி நிறுவணங்களை ஐசரி வேலன் குடும்பம் நடத்துகின்றது

இதனை யார் படித்தார்களோ இல்லையோ, இந்த லாரன்ஸ் என்பவர் நன்றாக படித்திருப்பது தெரிகின்றது

ரஜினி கட்சி, கொடி, மன்றம் என கடும் அறிவிப்புக்களை சொல்லி கொண்டிருக்கின்றார் லாரன்ஸ்

ஆக ஐசரி வேலன் வழியில் நடக்கின்றார் லாரன்ஸ்…

எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் ஒரே குணம் என லதா சொன்னது இதற்காகத்தான் போல, சரியாக சொல்லியிருக்கின்றார் லதா.