ஐபில் போராளிகள் முகத்தில் கரிபூசி விளையாடுவது பழனிச்சாமிதான்

ஒரு பக்கம் காவேரிக்காக ஐபிஎல் போட்டியினை போராளிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவில் தங்கம் வென்ற தமிழர்களுக்கு 50 லட்சம், 20 லட்சம் என அள்ளி வழங்கிகொண்டிருகின்றார் பழனிச்சாமி

மொத்த கணக்கு சில கோடிகளை தாண்டி செல்கின்றது

எந்த போராளியாவது விவசாயி காய்ந்து கிடக்கும்பொழுது விளையாட்டு வீரனுக்கு 50 லட்சமா? என கேட்கவே இல்லை

இவர்கள் கரடியாய் கத்தினாலும் கொஞ்சமும் அஞ்சாமல் காமன்வெல்த் வீரர்களுக்கு அள்ளிகொடுக்க பழனிச்சாமிக்கு தில் எப்படி வந்தது

உண்மையிலே அவர் புன்னகை போராளியா? விளையாட்டினை வளர்க்க அரும்பாடு படுபவரா?

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, அவர் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு

அந்த தைரியத்தில் இந்த போராளிகளை பார்த்து “சவுக்கியமா?” என மவுனமாக கேட்க முடிகின்றது

இப்போதைக்கு ஐபில் போராளிகள் முகத்தில் கரிபூசி விளையாடுவது பழனிச்சாமிதான்

ஆனால் அவர்களோ அதை துடைத்துகொண்டு அவர்கள் போக்கில் அண்ணா சாலையில் குட்டிகரணம் அடித்துகொண்டே இருக்கின்றார்கள்