ஐரோப்பாவின் டிரம்ப்

ஐரோப்பாவின் டிரம்ப் என பெயர் பெற்றுவிட்ட போரீஸ் ஜாண்சன் ஈரான் விவகாரத்தில் துள்ளி குதித்து கிரவுண்டுக்கு வந்து வார்ம் அப் செய்துகொண்டிருக்கின்றார்

ஆளுக்கொரு கப்பலை பிரிட்டனும் ஈரானும் பிடித்து வைத்திருக்கும் நிலையில், பிரிட்டன் கப்பலை மீட்கபோகின்றேன் அதே நேரம் ஈரான் கப்பலை விடுவிக்க முடியாது என்பது போல குதித்துகொண்டிருகின்றார்

ஈரான், பிரிட்டன் செய்தது தவறு என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என சொல்லியிருந்தது. அது பிரிட்டன் பிரதமரை கொதிக்க வைத்தாயிற்று

நாங்கள் தவறு செய்தோமா? என பொங்கிவிட்டார் ஜாண்சன்

பொதுவாக பிரிட்டானியர்கள் தங்களை பெருமையாக நினைப்பார்கள், அது போரீஸ் ஜாண்சனிடம் அதிகமாக இருக்கும் போல..