ஐரோப்பாவுடன் நல்லுறவு
அமெரிக்காவுடன் கடும் முறுகல் இருக்கும் நிலையில் ஐரோப்பாவுடன் நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றது சீனா..
சீனாவின் நிரந்தர அதிபர் ஜின்பெங் ஐரோப்பா சென்றிருக்கின்றார், அங்கு பல நாடுகளை சந்தித்த அவர் மிகபெரும் காரியத்தை செய்துவிட்டார்
ஆம் இத்தாலியினை தன் முத்துமாலை மற்றும் பட்டுசாலை திட்டத்தில் சேர்த்துவிட்டார்
ஆசியாவில் ஒரே சாலை ஒரே இணைப்பு எனும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்து பல நாடுகளை இணைத்து பெரும் சாலை மற்றும் கடல் வழி இணைப்பை ஏற்படுத்தி தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் சீனா முதல் ஐரோப்பிய நாடாக இத்தாலியினை பிடித்திருக்கின்றது
ஆசிய நாடுகளை விடுங்கள், ஆனால் இத்தாலி உலகின் 10 பொருளாதார வள நாடுகளில் ஒன்று
அப்படிபட்ட இத்தாலிக்கு கொஞ்சம் பொருளாதார சரிவு, அதனால் சீனாவின் பிடிக்குள் செல்லுமோ என அஞ்சுகின்றார் பலர்
வழக்கமாக ஒரு நாடு சிக்கிவிட்டால் கந்துவட்டியினை விட மோசமான வட்டியினை வாங்கி அதை விழுங்கிவிடும் நாடு சைனா
அது இத்தாலியில் கால் வைத்திருப்பது வித்தியாசமாக நோக்கபடுகின்றது, சீனாவின் ஐரோப்பிய வியாபாரம் வேறு
ஆனால் சாலைபோட்டு வருவதில் ராணுவ நோக்கம் இருக்கலாம் என மற்ற ஐரோப்பிய யூனியன் தேசங்கள் அஞ்சுகின்றன
நடக்கும் காட்சிகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் நோக்கிகொண்டே இருக்கின்றன
ஆசிய நாடுகளை தாண்டி ஐரோப்பா வரைக்கும் தன் பழைய பட்டுசாலையினை , செங்கிஸ்கானின் காலத்து பெருமைகள் நோக்கி செல்கின்றது சைனா
இதே இத்தாலியில் இருந்துதான் பட்டுசாலை வழியாக சைனா சென்றான் மார்க்கோபோலோ
சீனாவின் வெடிபொருள், காகிதம் திசைகாட்டும் கருவி என சகலத்தையும் அவனே ஐரோப்பாவுக்கு கொண்டுவந்தான், அதன் பின் ஐரோப்பா எழும்பிற்று
இன்று அதே இத்தாலிக்கு சாலை அமைத்து வந்து நிற்கின்றது சைனா
எங்களிடமிருந்து கொண்டு சென்ற செல்வங்களை மறுபடியும் கொண்டு செல்ல வந்திருக்கின்றோம் என வந்து நிற்பார்களோ என்னமோ?