ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகபோகின்றோம் …

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகபோகின்றோம் என அறிவித்து பிரிட்டன் படும் பாடு கொஞ்சமல்ல‌

அது மிக சிக்கலான பிரச்சினை, அந்த ஒப்பந்தபடி ஐரோப்பாவின் மற்ற தேசங்களின் மக்களால் பிரிட்டானிய மக்கள் பாதிக்கபடுகின்றார்கள், பிரிட்டன் நாசமாகின்றது பிரிட்டன் சுரண்டபடுகின்றது என வந்த குரலை அடுத்து பிரிட்டன் அதிலிருந்து விலக தயாரானது

ஆனால் விவகாரம் அவ்வளவு சுமூகமாக இல்லை, விலகினால் தனித்துவிடபடும் பிரிட்டன் கடும் விளைவுகளை சந்திக்கலாம் என்பதால் அரசுக்கு கடும் தயக்கம்

நாட்களை நீட்டித்துகொண்டே சென்றார்களே தவிர இன்னும் முழுமையாக விலகவில்லை

இந்த சிக்கலில்தான் கடந்த பிரதமர் தலைதெறிக்க ஓடி தெரசா மே வந்தார்

அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகினாலும் சில ஒப்பந்தங்களை செய்ய முனைந்தார்

அது மறுபடியும் சர்ச்சையாகி இப்பொழுது பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலகுகின்றார்

யாராவது வரும்வரை பொம்மையாக நீட்டிக்க ரெடி என தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டார் அம்மணி

சிக்கலை சரியாக கையாளமுடியாமல் அம்மணி அழுதுகொண்டே விலகுவது உலக அரங்கில் அதிர்வினை ஏற்படுத்துகின்றது

உலகை ஆண்ட பிரிட்டனே ஒரு யூனியனில் இருந்து பிரியமுடியாமல், பிரிந்தால் பலத்த சிக்கலை எதிர்நோக்குவோம் என பரிதவிக்கின்றது

ஆம் அது முடியவும் முடியாது, பிரிந்தாலும் பல விஷயங்களில் அண்டை நாடுகளுடனான பல ஒப்பந்தமும் அனுசரிப்பும் அவசியம்

பிரிட்டனே , அதுவும் ஒரு யூனியனில் இருந்து பிரியவே தடுமாறும் பொழுது இங்கே சிலர் தமிழ்நாட்டை பிரித்து வாழ்வாங்கு வாழ்வார்களாம், சொல்லிகொள்கின்றார்கள்.

அதையும் சிலர் நம்புகின்றார்கள்