ஐ.என்.எஸ் விராட் கப்பல் ஓய்வுபெற்று உடைக்கபட போகின்றது

உலகின் மிக பழமையான விமான தாங்கி கப்பல் எனும் பெருமையினை வைத்திருந்த ஐ.என்.எஸ் விராட் கப்பல் ஓய்வுபெற்று உடைக்கபட போகின்றது

இந்திய கப்பல்படையில் ஐ.என்.எஸ் விக்ராந்த்க்குபின் பெயர் பெற்ற கப்பல் அது, பல்வேறு நடவடிக்கைகளுக்கு அது பயன்பட்டது

1970களில் இருந்து 2013வரை அது இந்தியாவுக்கு அரணாய் நின்றது, அமைதிபடை காலங்களில் அது வங்ககடலில் நின்றது, ஆனால் முழு வீச்சில் களமிறங்கவில்லை

சிக்னல்களை கண்காணிக்கும் பணியினை செய்தது, தாக்குதலை செய்யவில்லை, அது தாக்கியிருந்தால் புலிகூட்டம் ஒரு நொடி தாங்கியிருக்காது

இந்திய கப்பல்படையின் பெரும் அடையாளமான அந்த கப்பல் உடைக்கபடுவதை பலர் விரும்பவில்லை

ஆயினும் வேறு வழியில்லை

தேசபற்று மிக்க மகராஷ்டிரா அரசும், ஆந்திர அரசும் அக்கப்பலை வாங்கி நினைவு சின்னமாக நிறுத்த தயாராயின‌

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு மறுத்துவிட்டது

பழையன கழிதல் புதியன புகுதல் என்பது எல்லா இடத்திலும் உண்டு என்பதால் விராட்டும் விடைபெற்றுவிட்டது

ரஷ்யாவிடம் இருந்து வாங்கபட்ட விக்ரமாதித்யா கப்பல் இனி அந்த இடத்தை நிரப்பும்

தேசம் ஐ.என்.எஸ் விராட்டுக்கு கண்ணீரோடு பிரியாவிடை கொடுக்கின்றது

ஆந்திர, மராட்டிய அரசுகள் இன்னும் நாங்கள் பராமரிக்கின்றோம், எங்களிடம் தாருங்கள் கோருகின்றன.

நல்ல வேளையாக தமிழகம் கோரவில்லை, ஒருவேளை தமிழக அரசிடம் ஒப்படைக்கபட்டால் என்னாகும்?

புரட்சி தலைவர், தலைவி பெயரில் கப்பல் மாற்றபட்டு, “அதோ அந்த பறவை போல வாழவேண்டும்” என்ற பாடல் அனுதினமும் ஒலிக்கும்..

இதற்கு அக்கப்பலை உடைத்தே போடலாம், அதுதான் நடக்கின்றது.