ஐ.எஸ்.ஐ அறிவு அவ்வளவுதான்
இன்னும் மாவீரன் கசாப், இன விடுதலை போராளி கசாப், வரலாறு கண்ட இரண்டாம் பாபர் கசாப் என ஒரு பயலும் கிளம்பாதது ஆச்சரியம்
இந்த ஐ.எஸ்.ஐ அமைப்பு கூறு கெட்டது என ஏன் உலகம் சொல்கின்றது என்றால் இதற்காகத்தான்
அந்த 11 பேர் கொண்ட குழுவில் கசாப்புடன் 2 புலிகளை கடன் வாங்கி அனுப்பியிருந்தால் அல்லது சில தமிழர்களை அனுப்பியிருந்தால் இன்று எப்படி இருந்திருக்கும்?
தமிழனின் வீரம் உலகிற்கு விளங்கிய நாள், தமிழன் இந்திய ஏகாதிபத்தியத்துக்கு சவால்விட்ட நாள் என கொண்டாடி என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?
கசாப்புடன் அவர்களை தூக்கில் போட்டிருக்க முடியும்? 7 பேர் விடுதலை 9 தமிழர் விடுதலையாக மாறியிருக்கும்
அவர்களும் பரோலில் வந்திருப்பார்கள், பெண் பத்திரிகையாளர் எல்லாம் கட்டி தழுவியிருப்பார்கள், பிரிவினை அழிச்சாட்டிய தலைவனெல்லாம் உச்சி முகர்ந்திருப்பான்
எவ்வளவு தேசவிரோத காட்சிகளை நடத்தியிருக்கலாம், ஆனால் ஐ.எஸ்.ஐ அதை தவறவிட்டது
அட பாராளுமன்ற தாக்குதலிலாவது , அட தமிழ்நாட்டு தமிழன் வேண்டாம், சோமாலியா பக்கம் ஒரு ஆப்ரிக்கனை பிடித்து 4 தமிழை சொல்லி கொடுத்து ஆக ஆக ஆக என்றாவது புலம்ப சொல்லிகொடுத்து இந்திய அரசிடம் தமிழன் என சிக்க வைத்த்தால் எப்படி இருந்திருக்கும்?
அட தாவுத் பாயிடம் கேட்டாலே மும்பை தமிழன் சிலரை கொடுத்துவிட்டு சென்றுவிட போகின்றார்,
பெரும் தாக்குதல் நிறைவேறினால் “அய்யய்யோ தமிழன்…” என கத்த தமிழ்நாட்டு தமிழன் ரெடி
இங்குள்ள தமிழன் அவனையும் அப்சல் குருவையும் தூக்கிலிடவிடுவானா?
யகூப் மேமனுடனோ இல்லை கசாப்புடனோ ஒரு தமிழன் சேர்ந்திருதால் அவர்களை தூக்கிலிட முடியும்?
நிச்சயம் முடியாது, இங்கு ஆடி தீர்ப்பார்கள் , ஆனால் பொன்னான வாய்ப்பினை எல்லாம் கோட்டை விட்டது ஐ.எஸ்.ஐ


ஏன் அப்படி?, ஐ.எஸ்.ஐ அறிவு அவ்வளவுதான் ,இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாப்பில் இருந்த பின்லேடனை அமெரிக்கா போட்டு தள்ளியிருக்க முடியுமா என்ன?
(ஐ.எஸ்.ஐயின் அடையாளம் கண்டீர்களா? ஆடுதான் அது
ஆக சில ஆடுகளை அது தயார் செய்து இந்தியாவுக்குள் அனுப்ப, ஐ.எஸ்.ஐ எனும் ஆட்டை வைத்து உலக நாடுகள் ஆடும் ஆட்டமே தனி
ஆட்டுமூளை ஐ.எஸ்.ஐ அது, அதனால்தான் தமிழனை இழுத்துவிடாமல் சொத்தை திட்டங்களையே இந்தியாவில் செய்து கொண்டிருக்கின்றது)