ஐ சப்போர்ட் “ஜெனரல்” அழகிரி
கலைஞரை கொல்லமுயன்றதாக வெளியேற்றபட்டவர் வைகோ, தென்னக திமுக அன்று திண்ணையிலும் இல்லை
அன்று தென்னகத்தில் கட்சியினை காப்பாற்றியது சாட்சாத் அழகிரி, மற்றபடி அழகிரி ஏன் மதுரை செல்ல போகின்றார் வழக்குகளில் சிக்க போகின்றார்
வைகோ செய்த துரோகமே அழகிரியினை தீவிர அரசியலுக்கு கொண்டு வந்தது
ஸ்டாலின் மேல் என்ன கோபம் என்றால், அந்த அழகிரியினை விரட்டிவிட்டு வைகோவினை அருகில் சேர்த்திருக்கின்றார்
எந்த வைகோ?
ராஜிவ் கொலையில் திமுகவினை தடை செய்யுமளவு சிக்கல்வில் இட்ட வைகோ, கட்சியினை உடைத்து திமுகவினை பலவீனபடுத்திய வைகோ
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரவிடாமல் போராடிய வைகோ அதுவும் 2016ல் திமுகவின் தோல்விக்கு காரணமான வைகோ
அந்த கோடாரி காம்பினை அருகில் அமர்த்துவார்களாம், ஆனால் கட்சியினை விழுதாக தாங்கி நின்ற அழகிரியினை விரட்டுவார்களாம்
வைகோவினை சேர்த்தது அரசியல் கணக்காக இருக்கலாம் இருக்கட்டும்
ஆனால் 2009ல் ஈழ அழிவுக்கு காரணம் கலைஞர் என முத்துகுமார் மரணத்தின் பொழுது தொடங்கி 2016 வரை பேசி திரிந்தவர் வைகோ
நடராசன் மேடை, சீமான் மேடைகளில் அவர் கலைஞரை புழுதிவாரி தூற்றியதை யார் மறக்க முடியும்?
மானமுள்ள திமுக தொண்டன் மறப்பானா? தியாகியான முக ஸ்டாலினுக்கு மானமில்லாமல் இருக்கலாம்
தொண்டனுக்கு இருக்குமா?
அந்த வைகோவினை ஈழமக்களுக்கு கலைஞர் செய்த நன்மைகளை பட்டியலிட்டு, 2009 துயரத்திற்கு அவர் காரணமில்லை என வைகோ வாயினால் சொல்ல வைத்துவிட்டு அல்லவா அருகில் சேர்த்திருக்க வேண்டும்
செய்தாரா ஸ்டாலின்
தந்தை மீதான பழியினை துடைப்பதை விட மகனுக்கு என்ன கடமை இருக்கின்றது, மானமுள்ள மகன் அதை துடைத்திருப்பானா மாட்டானா?
அழகிரி அட்சி தலைவராக இருந்திருந்தால் அந்த களங்கத்தை வைகோ தலையினை பிடித்து வைத்து துடைத்திருப்பார்
திமுக எனும் கட்சியினை வலுவாக நடத்த அழகிரி முக்கியம், நிச்சயம் முக்கியம்
எந்த வைகோவிற்காக அழகிரியினை நிறுத்தினார்களோ அதே துரொகி வைகோவினை அருகில் வைத்துகொண்டு அழகிரியினை வெளியே அனுப்ப அவர் என்ன விஜயகாந்தை தேட கழுத்தை பிடித்து அனுப்பபட்ட வடிவேலுவா?
கட்சி வலுப்பெற அழகிரி அவசியம் என்பதில் மாற்று கருத்தில்லை
ஐ சப்போர்ட் “ஜெனரல்” அழகிரி