ஒன்றுமே இல்லை என்பதுதான் சோகம்
இஸ்ரேல் அன்றிருந்தே வறண்ட பூமி, ஒரு காலத்தில் அங்கு பஞ்சம் வந்துதான் அவர்கள் எகிப்தெல்லாம் சென்று அடிமையாகியிருந்திருகின்றார்கள்
அவர்கள் வரலாற்றில் பஞ்சம் அடிக்கடி எக்காலமும் உண்டு
ஜோர்டான் ஆறு என்பதை தவிர வேறு ஆதாரமில்லை, அதுவும் சிரியா ஜோர்டான் என பல நாடுகளுக்கு பாத்தியபட்டது
அவர்கள் கடல்நீரை சுத்திகரிப்பதில் அர்த்தமுண்டு
ஆறுகளே இல்லா சவுதி அரேபியா செய்வதிலும் அர்த்தம் உண்டு
தமிழக நிலை அப்படியா இருந்தது
ஏரியும் கால்வாய்களும் குளங்களுமாக செழித்திருந்த பகுதி சென்னை, ஆங்கிலேயன் நீர்வழி போக்குவரத்தே நடத்தியிருந்தான்
அந்த வளத்தை தொலைத்துவிட்டு இஸ்ரேலை பார் என்பதெல்லாம் மடமை அன்றி வேறென்ன?
அவனிடம் இல்லை தேடுகின்றான், நாமோ இருந்ததை புதைத்துவிட்டு நிற்கின்றோம் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையா?
நூற்றுகணக்கான ஏரிகளும் குளங்களும், பல ஆறுகளும் கொண்ட சென்னையில் அவை எல்லாம் மூடிவிட்டு கடல்பக்கம் செல்வோம் என்பதெல்லாம் அறிவிலி செயல்
கடல்நீரை குடிநீராக்குவோம் என சொல்லிகொண்டாலும் விவரம் அறிந்த நாடுகள் அதை வயலுக்கும் செடி கொடிகளுக்கும் பாய்ச்சுமே அன்றி குடிநீருக்கு கொடுக்காது
அரேபிய உயர்குடிகள் அந்நீரை பருகுவதில்லை, இஸ்ரேலிலும் அது குடிநீருக்கு பெரும்பாலும் பயன்படுவதில்லை
சுத்திகரிக்கபட்ட கடல்நீரை அவர்கள் கொடுப்பதெல்லாம் தொழிற்சாலைக்கும் உழைக்க வந்த தொழிலாளர் கூட்டத்துக்கே
அவர்கள் இருந்தால் என்ன? செத்தால் அவர்களுக்கென்ன?
என்னதான் கடல்நீரை பிரித்தாலும் சிலவகை கெடுதல்களை அது சிறுநீரகத்துக்கு செய்யும் என்கின்றது ஆய்வு
நிலத்தடி நீரை எடுக்க கூடாது அதை குடிக்கவே கூடாது என பல நாடுகள் சட்டம் போட்டிருக்கின்றன ஏன்?
அதிலும் உடலுக்கு ஆபத்தான விஷயம் உண்டு
சரி அதெல்லாம் இருக்கட்டும்
சென்னையில் இப்பொழுது யாருக்கு சிக்கல்?
ஏழை மக்களுக்கு சிறு தொழில் நடத்துபவர்களுக்கு
அரசியல்வாதி வீடுகளில் நீர் தட்டுப்பாடு இல்லை அவர்களின் ஆலைகளுக்கும் தட்டுபாடு இல்லை சாராய ஆலை உட்பட
இதில் ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பேதமே இல்லை
இப்பொழுது வறட்சி குடிநீர் இல்லை என கத்தலாம், நாளையே பெருமழை கொட்டினால் இங்கு நீரை சேமிக்க என்ன ஆதாரம் முறையாக இருக்கின்றது? எதை தூர்வாரி பராமரித்து முறையாக வைத்திருக்கின்றார்கள்?
ஒன்றுமே இல்லை என்பதுதான் சோகம்