ஒன்றை கவனித்தீர்களா?
நிர்மலா சீத்தாராமனை “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்” எனும் பாரதியார் பாடல் மூலம் வாழ்த்தினார் ப.சிதம்பரம்
ஆக பாராளுமன்றத்தில் புறநானூறும், பாரதியாரின் செந்தமிழ் பாடல்களும் கரை புரண்டு ஓடுகின்றது
ஒன்றை கவனித்தீர்களா?
புறநானூறையும், பாரதியார் பாடலையும் பாடுவது தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியினர்
அதாவது திமுகவினர் சொல்வது படி இந்தியினை திணிக்கும் தேசிய கட்சியினர்
முன்பு அப்துல்கலாமும் பாராளுமன்றத்தில் குறளை அடிக்கடி பயன்படுத்துவார் அவரும் திராவிட கட்சி அல்ல
அப்படியானால் தமிழை காக்க வந்த திமுகவினர் என்னதான் செய்வார்கள்?
தமிழ் வாழ்க என கத்துவார்கள், அது தானாக வளர்ந்தும் விடும்