ஒபாமாவின் புகழுக்கு களங்கம் அவர் மகளின் வடிவில் வருகின்றது

ஒபாமா அமெரிக்காவில் ஒரு திருப்புமுனை ஜனாதிபதி, முதல் கருப்பின அதிபர் என்பது முதல் பல போர்களை தவிர்த்து நோபல் பரிசு பெற்றவர் என்பது வரை சிறப்புகள் அதிகம்

பின்லேடனை போட்டு தள்ளியதும் அவர் காலத்திலே, அதன் பின் அவர் பல இடங்களில் சமாதானத்தை விரும்பினார்

அப்படிபட்ட ஒபாமாவின் புகழுக்கு களங்கம் அவர் மகளின் வடிவில் வருகின்றது, அம்மணி லண்டனில் படிக்கின்றது, போதை பொருள் பாவனையில் அம்மணி விழுந்து அது பெரும் சர்ச்சையாகி ஒபாமாவுக்கு தீரா தலைவலியாகின்றது

ஒபாமா மேலும் முன்பு போதை சர்ச்சை இருந்தது, அதாவது பள்ளிகாலங்களில் அதை பாவித்தார் என்ற சர்ச்சை இருந்தது அதிலிருந்து மீண்டு சாதித்தார் ஒபாமா

ஆனால் அவரின் மகளின் நிலை அச்சபடும்படி உள்ளதாம்

விஷயம் வைரமுத்துவுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை தெரிந்தால் “ஒரு பெண் புறா, கண்ணீரில் தள்ளாடி..” மற்றும் “ஒரு பண்பாடு இல்லையென்றால்..” போன்ற பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒபாமாவுக்கு அனுப்பிவிடுவார்

அப்படியே கீழே தனக்கு இவ்வரிகளுக்காக புக்கர் பரிசு தரப்பட‌ சிபாரிசு செய்ய வேண்டி ஒரு சில வரிகளும் எழுதி அனுப்புவார்