ஒரு கல்லறையினையும் விடுவதாக இல்லை
படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா? அஞ்சலி செலுத்துகின்றார்களாம்.
பேச்சிபாறை அணையினை கட்டிய வெள்ளையன் கல்லறை அங்கேதான் இருக்கின்றது. இந்த அணை என் வாழ்நாள் சாதனை, என் உடல் இங்கேதான் புதைக்கப்ட வேண்டும் என் சொன்னான் அந்த மின்சின்
ஓரளவு லிங்கா கதையுடன் ஒத்துபோகும் வரலாறு மின்சின். அந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அவ்வளவு முக்கியம்
அந்த அணைக்கட்டு முன்ன்னால் எல்லாம் நாஞ்சில்நாடு அதிகம் விளைவிக்கவில்லை. அந்த அணையே பல திருப்பங்களை கொடுத்தது. பின்னாளில் கன்னியாகுமரியினை விடமாட்டோம் என கேரளா முரண்டுபிடிக்க இந்த அணையும் காரணம்
அவ்வளவு முக்கியமான வரலாறான அந்த மின்சின் கல்லறை இப்பொழுதுதான் நாம் தமிழர் கண்ணில் பட்டுவிட்டது உடனே அஞ்சலி செலுத்த கிளம்பிவிட்டார்கள்
ஏம்பா சீமான் குஞ்சுகளா, மின்சன் வந்தேறி இல்லையா?
இந்த மின்சன் செய்தது என்ன? ஒரு நீர்தேக்கம் கட்டியது, உடனே வணங்குகின்றீர்கள் நல்லது.
அக்காலத்தில் நாயக்க மன்னர்கள் கட்டிய குளங்கள் எத்தனை? ஏரிகள் எத்தனை? திருமலை நாயக்கன் , மங்கம்மாள் வெட்டிய ஏரிகள் கணக்கென்ன?
அவர்களயும் விழுந்து வணங்குங்கள், அவனல்லவா நன்றியுள்ள தமிழன்
ஏ டம்லர்ஸ், மின்சினை விட பலமடங்கு உயர்ந்தது நாயக்க மன்னர்களின் நீர் மேலாண்மை பணி
அதனால் அவர்களை வந்தேறிகள் என சொல்வதை விட்டுவிட்டு, அந்த குளத்தின் மடைகளில் சென்று வணங்குங்கள்.
என்னாயிற்று இவர்களுக்கு?
திடீரென பசும்ப்பொன்னில் கும்பிடுகின்றார்கள், திடீரென இம்மானுவேல் சேகரன் சமாதி, அடிக்கடி ராஜராஜன் சமாதி என நிற்கின்றார்கள்.
ஒரு கல்லறையினையும் விடுவதாக இல்லை
ஆக எங்கெல்லாம் கல்லறை உண்டோ, அங்கெல்லாம் இப்படி சென்று கையினை நீட்டி, கத்தி வீரவணக்கம் செலுத்துவது இவர்கள் வாடிக்கை .
இவர்களுக்கு சுடுகாட்டு பேய் பிடித்திருக்கும் போல, அவர்களின் தலைவனும், அவர்களும் கத்துவதை பார்த்தாலும் அப்படித்தான் இருக்கின்றது.