ஒரு குடிமகனுக்கு கூட பாதுகாப்பு வழங்கமுடியாத என்ன ஆட்சி இது?

வட மாநிலத்தில் அச்சம்பவம் நிகழ்ந்திருகின்றது

ஒரு ஆணுடன் ஒரு பெண் நெருங்கி பழகியிருக்கின்றாள், உலகில் மிக பலமான ஆயுதம் இளமையான பெண் எனும் சாணக்கியனின் சொல் அங்கு உண்மையாக இருந்திருக்கின்றது

அவனை மறைவான இடத்திற்கு ஒருநாள் அப்பெண் அழைத்து சென்றிருக்கின்றாள், அங்கு 6 குண்டு பெண்கள் அதாவது ஆயுதம் தரித்த சமூக விரோத பெண்கள் இருந்திருக்கின்றார்கள்

கொஞ்சம் போதை, பாக்கு என இருந்த பெண்கள் அவனை மிரட்டி காசு பர்ஸ் ஏடிம் கார்டு மறக்காமல் பாஸ்வேர்ட், போன் என எல்லாவற்றையும் மிரட்டி பிடுங்கியிருக்கின்றார்கள்

அழைத்து சென்ற பெண் அவனை அடித்து ஆடை களைந்து நிர்வாண படம் எடுத்திருக்கின்றாள்

உடனே 10 லட்சம் பணம் வேண்டும் இல்லாவிட்டால் உன் வீடியோ இணையத்தில் ஏற்றபடும் என மிரட்டியிருக்கின்றாள்

சுற்றி நின்ற பெண்களும் பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட முயன்றிருக்கின்றார்கள்

அவரை அந்த சுலோகம் காப்பாற்றியிருக்கின்றது, ஆம் ஆண்களுக்கு அதுதான் எப்பொழுதும் கவசம்

ஜெய் ஸ்ரீராம் என கத்திவிட்டு நான் ஏகபத்தினி விரதன் என்னை களங்கபடுத்தாதீர் என கெஞ்சியிருக்கின்றான்

அவர்களோ ஏக பத்தினி விரதனுக்கு இவள் பின்னால் என்ன வேலை என சாத்தியிருக்கின்றார்கள்

தன் ஸ்ரீராம கோஷமும் பலனளிக்காத நிலையில் என் ஆடையினை கொடுங்கள் பணம் எடுத்து வருகின்றேன் என சொல்லி ஓடியிருக்கின்றான்

அவன் வீட்டுக்கு ஓடுவான் , அவன் மானம் அவனுக்கு முக்கியம் , என்ன இருந்தாலு அவன் இந்திய ஆண்கமகன் அல்லவா? ஆக பணத்தோடு வருவான் என நினைத்த அந்த கொடூர பெண்கள் நினைப்பில் மண் விழுந்திருக்கின்றது,

அவன் காவல் நிலையம் ஓடி தனக்கு நிகழ்ந்த கொடுமையினை சொல்லி கதறியிருக்கின்றான்

ஆணின் கஷ்டம் ஆணுக்குத்தானே புரியும், அதனால் காவலர்களும் மனம் இறங்கியிருக்கின்றார்கள்

அக்கும்பல் வளைக்கபட்டிருக்கின்றது

இவன் சொல்வது உண்மையா இல்லையா என்பது வீடியோவில் இருந்த நிர்வாண உருவமும் இவனும் ஒன்றா இல்லையா என பலத்த சோதனை எல்லாம் நடந்திருக்கின்றது

எப்படி சோதித்திருப்பார்கள் என்பதை சபை நாகரீகம் கருதி நாம் சொல்லமுடியாது அல்லவா, மன்னித்துவிடுங்கள்

இப்பொழுது அந்த 6 பெண்களும் கைதுசெய்யபட்டு தீவிரவிசாரணை நடக்கின்றது

ஆக இந்த பாசிச பாஜக ஆட்சியில் நாட்டில் ஆண்களுக்கு கொஞ்சமும் பாதுகாப்பில்லை என அகில உலக ஆண்கள் உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது

இனி தங்கள் நாட்டு ஆண்கள் தனியாக அல்லது தகுந்த பாதுபாப்பில்ல்லாமல் இந்தியாவுக்கு பயணம் செல்ல வேண்டாம் என உலக நாடுகள் தங்கள் நாட்டு ஆண்களை எச்சரிக்கும்

ஒரு குடிமகனுக்கு கூட பாதுகாப்பு வழங்கமுடியாத என்ன ஆட்சி இது?

என்று ஒரு ஆண் பை நிறைய பணத்துடனும், கழுத்து நிறைய‌ தங்க சங்கிலியுடனும் தனியாக‌ இந்நாட்டில் நடமாட முடிகின்றதோ அன்றுதான் இந்நாடு சுதந்திரம் பெற்ற நாடு எனும் நிலை பெயரை அடைய முடியும் என சங்கமும் தன் கண்டனத்தை அரசுக்கு சொல்லி கொள்கின்றது