ஒரு சிலர் கவனித்து நாம் சொல்வதை செய்கின்றார்கள்

நாம் எழுதுவதை யார் கவனிக்கின்றார்களோ இல்லையோ, ஒரு சிலர் கவனித்து நாம் சொல்வதை செய்கின்றார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் சிறுத்தை சிவா

அதாவது நாம் முன்பே, இன்னும் அழுத்தமாக சொன்னால் ரஜினி வயதான கேரக்டர்களில் நடிக்க தொடங்கியிருக்கும் சமீபகாலத்தில் இருந்தே சொல்லிகொண்டிருந்தோம் ரஜினிக்கு ஏற்ற ஜோடி குஷ்பு

ஆம் கபாலி, காலா படங்களில் ரஜினிக்கு ஏற்ற ஜோடி அவர்தான். லிங்கா படத்திலே ராஜா ரஜினிக்கு ஜோடியாக அவர் வந்திருக்க வேண்டும்

தலைவி குஷ்பு வராததால் இந்த 3 படங்களும் தோற்றது

இதை மிக கவனமாக கவனித்த சிறுத்த சிவா தன் அடுத்த ரஜினி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்புவினை நடிக்க வைத்திருக்கின்றார், வாழ்த்துக்கள்

அட்டகாசமான சினிமா கணக்கு இதுதான்

அண்ணாமலை படத்தில் மிக பெருந்தன்மையாக ரஜினியினை தன் ஜோடியாக நடிக்க வைத்தார் தலைவி ரஜினி அதனால் மறுவாழ்வு பெற்றார், தொடர்ந்து ரஜினிக்கு கைகொடுக்க மன்னன் படத்திலும் தலைகாட்டினார் தலைவி

அந்த தங்க தலைவி ரஜினி அரசியலுக்கு வரும் சூழலிலும் அவருக்கு கைகொடுக்க வந்தாயிற்று

நம்புகின்றீர்களோ இல்லையோ, சிவா படத்தில் இரண்டு ரஜினி அதாவது வயதான மற்றும் வாலிப ரஜினி இருந்தால் இரண்டுபேருக்குமே தலைவி ஜோடியாக அட்டகாசமாக பொருந்துவார்

இது வேறு நடிகைக்கு சாத்தியமே இல்லை

சிங்கத்து பாலை தங்க தட்டில் வைக்காவிட்டால் கெட்டுவிடும் என்பார்கள், அப்படி தலைவி இல்லா சங்கமும் சரிவராது. சங்கம் இல்லாமல் தலைவிக்கும் பலமில்லை

இதனால் மறுபடியும் தலைவியினை சங்கம் நிரந்தர தலைவியாக்கிவிட்டது

தலைவி இடையில் மாற்றபட்டதில் கோடிகணக்கான உறுப்பினர்கள் கொந்தளித்துவிட்டார்கள் என்பதாலும், சங்கம் துண்டு துண்டாக உடையும் நிலைக்கு சென்றுவிட்டதாலும் இம்முடிவு எடுக்கபடுகின்றது

சீனாவுக்கு ஜின்பெங் போல சங்கத்துக்கு இனி தலைவி குஷ்பு நிரந்தர தலைவி

அந்த சிறுத்தை சிவா செய்த மாபெரும் காரியத்தால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், இந்த ஆண்டிற்கான மிக சிறந்த ரசனையாளர் விருதும் சங்கத்தால் கொடுக்கபடுகின்றது

தன் கடைசி மூன்று படங்களில் தன்னை புறக்கணித்த ரஜினி விரைவில் மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்த பின்பே தலைவி அப்படத்தில் நடிக்க வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது

ஆக சங்கத்து கோடான கோடி உறுப்பினர்கள் இன்றிலிருந்து விரதம் தொடங்குகின்றார்கள், இனி அப்படம் வரும்பொழுது அதை மாபெரும் வெற்றிபடமாக்கிவிட்டு அது டைட்டாணிக் அவதார் படங்களின் சாதனையினை நொறுக்கி தலைவி ஆஸ்க விருதினை அள்ளிய பின்பே விரதம் முடிப்பார்கள்

அவர் இன்றிலிருந்து சிறுத்தை சிவா அல்ல, மாறாக‌ இனி குஷ்பு சிவா என அன்போடு அழைக்கபடுவார்.