ஒரு பேனை கொண்டு வைத்திருக்கின்றனர்
பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்க பார்த்தனர் பாஜகவினர், பூவும் வைக்க முடியா இடத்தில் ஒரு பேனை கொண்டு வைத்திருக்கின்றனர்
ஆம் நமீதா என்பவர் பாஜகவுக்கு வந்துவிட்டார், அம்மணிக்கு கட்சி மேடை என்பது சினிமா ஷூட்டிங் போன்றது, முன்பு ஜெயலலிதா மேடைகளில் தோன்றினார் இப்பொழுது பாஜக மேடையில் தோன்றியிருக்கின்றார்
குஷ்பு வரவேண்டிய இடத்திற்கு நமீதா வந்திருப்பது பாஜக சோகம்..
இதைத்தான் வள்ளுவன் சொன்னான் “கனியிருப்ப காய் கவர்ந்தற்று”.
இந்த குறளை பாஜகவினரிடம் சொன்னால் “யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றார்கள், இப்பொழுதெல்லாம் அவர்களும் சரியாகத்தான் பேசுகின்றார்கள் பி.டி அரசகுமார் என்பவரை தவிர.