ஒரு மகா பரபரப்பான செய்தி ஓடிகொண்டிருக்கின்றது
ஒரு மகா பரபரப்பான செய்தி ஓடிகொண்டிருக்கின்றது அது ஆபத்தும் அச்சமும் மிகுந்தது
செய்தி என்னவென்றால் கூடங்குளம் அணுவுலை ஹேக் செய்யபட்டதாகவும் அதன் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிட்டதாகவும் தகவல் கசிந்தன
இந்த அதிமுக்கிய பிரச்சினையினை அணுவுலை அமைந்திருக்கும் நெல்லை தொகுதியின் எம்.பி ஞானதிரவியமோ இல்லை அருகிருக்கும் தூத்துகுடி எம்பி கனிமொழியோ கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரோ கண்டுகொள்ளவில்லை என்பது மாபெரும் அதிர்ச்சி
ராதாபுரம் எம்.எல்.ஏ நீதிமன்ற தீர்ப்பு காய்ச்சலில் இருக்கின்றார், அருகிருக்கும் தொகுதி எம்.எல்.ஏக்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை
விஷயத்தை கையில் எடுத்தவர் சசி தரூர், ஆம் கூடன்குள அணுவுலைக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்ந்தால் கேரளா வரை அதன் பாதிப்பு இருக்கும் என உணர்ந்த அவர் விஷயத்தை பாராளுமன்றத்திலே எழுப்பினார்
தமிழகம் அதுவும் தென் தமிழகம் தூங்கிகொண்டிருந்த நேரம் அல்லது ஆழ்குழாயில் தலையினை விட்டுகொண்டிருந்த நேரம் அல்லது பிகில் படத்தில் இருந்த நேரம், இந்த மாபெரும் சிக்கலை சசிதரூரே அதன் முக்கியத்துவம் பற்றி கேட்டிருக்கின்றார்
விஷயம் டெல்லியால் அணுசக்தி கழகத்திடம் விசாரிக்கபட்டு, அது கூடன்குளம் அணுவுலை நிர்வாகத்திடம் கேட்க அவர்கள் மறுத்திருகின்றார்கள்
விஷயம் டெல்லி போய் சுற்றிவந்தபின் விஷயம் கலெக்டர் ஷில்பா குமாரிடம் வந்திருக்கின்றது, அலறி அடித்து ஓடிய நிர்வாகங்கள் இப்பொழுது ஹேக் ஏதும் நடக்கவில்லை என்கின்றார்கள்
அவர்கள் சொல்வது படி “சாதாரண இணையத்துக்கும் அணுவுலைகளில் பயன்படுத்தபடும் நெட்வொர்க்கிக்கும் இணைப்பு கிடையாது அதனால் ஊடுருவல் சாத்தியமில்லை” என்பதோடு நிறுத்திவிட்டார்கள்
நாம் உலக செய்திகள படிப்பதால் சொல்கின்றோம், நம்மால் மிக ஆழமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியும்
ஆனால் பதற்றத்தையும் வீண் பரபரப்பையும் எற்படுத்த கூடாது என்பதாலும் , அரசுக்கு ஒத்துழைக்கும் சமூக கடப்பாடு இருப்பதாலும் இவ்வளவுதான் சொல்லமுடியும்
அணுவுலையில் ஆள் உள்ளே செல்லமுடியாத இடங்களுக்கும் இன்னும் பல முக்கியமான விஷயங்களுக்கும் சில தனிபட்ட ஆட்டோமேட்டிக் சிஸ்டம் உண்டு இவை முழுக்க கணிபொறியால் இயங்குபவை
ஜப்பானின் புக்குஷிமா இதற்கு பெரும் உதாரணம், அந்த அணுவுலை பூகம்பத்தாக் தாக்கபட்டபொழுது இந்த விஷயம் சிக்கலை ஏற்படுத்தியது
மிகபெரும் உதாரணம் ஈரான், ஈரானின் அணுவுலைகள் ரஷ்ய சாயல் கொண்டவை, மகா கில்லாடிகளான இஸ்ரேலியர் சர்வதேச அணுசக்தி விஞ்ஞானிகள் உருவில் ஊடுருவி யாரும் ஊடுருவமுடியா ஈரானின் அணுவுலை நெட்வொர்க்கில் ஊடுருவி தகவல்களை அள்ளி சென்றனர்
விஷயம் இதுதான்
தனிபட்ட ஹேக்கர் கில்லாடி எவனும் கூடங்குள அணுவுலை நெட்வொக்குக்குள் நுழைந்து ஹேக் செய்யமுடியாது, அதுவாய்ப்பில்லை
ஆனால் பல விஞ்ஞானிகள் வந்துபோகும் இடம் என்பதால் ஏதோ உயர்மட்டத்தில் ஒரு உளவாளி உள்ளே புகுந்து ஏதோ முயற்சித்திருக்கலாம், இதை தெரிந்த இந்திய தரப்பு எச்சரிக்கைகாக தாங்களே விஷயத்தை கசியவிட்டிருக்கலாம்
இதெல்லாம் யூகம் எனினும், ஏதோ நடந்திருப்பது உண்மை”
மற்றபடி கூடங்குளம் அணுவுலை ஏதும் நடக்கவில்லை என்றுதான் சொல்லும், நடந்தாலும் நடந்தது என அவர்களால் சொல்லவே முடியாது

கூடங்குளத்தில் 6 அணுவுலை கனவோடு 2 அமைக்கபட்டு இயங்குகின்றன, இரண்டும் தமிழக பாஜக மற்றும் காங்கிரஸ் அலுவலகம் போல வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் சும்மாதான் கிடக்கின்றன, அனாலும் நிர்வாகம் அது இயங்குகின்றது பராமரிப்பு பணிக்காக சிலநாள் நிறுத்தினோம் என சிரிக்காமல் சொல்லும்
அப்படிபட்ட அணுவுலை நிர்வாகம் இதை ஒப்புகொள்ளுமா என்ன?
எனினும் நடந்திருக்கும் விஷயம் மிக மிக சீரியசானது, ஏதோ ஒரு சக்தி ஈரானிய சாயலில் கூடங்குள அணுவுலைக்கு குறிவைத்துவிட்டது தெரிகின்றது.
4 கோடி மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதால் அவர்கள் செய்ய வேண்டியதை செய்யட்டும்