ஒரு மாணவ பாதிரி தற்கொலை

குருத்துவ கல்லூரி என்பது கத்தோலிக்க பாதிரிகளை உருவாக்கும் ஆசிரமம், 7 முதல் 10 ஆண்டுகள் அவர்கள் பயிற்சிபெறும் இடம்

அப்படிபட்ட கல்லூரி திருச்சியிலும் உண்டு, அங்கு ஒரு மாணவ பாதிரி தற்கொலை செய்திருக்கின்றான்

போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பது போல அக்கால சொல் வழக்கு வழியில்லாதவனுக்கு பாதிரி வேலை என்பது

அது ஒன்றும் ரகசியமல்ல, பெரும் குடும்பத்து பணக்கார வாரிசுகள் பாதிரி பணிக்கு செல்லாது, செல்வதெல்லாம் வறிய குடும்பத்து எளிய வீட்டு வாரிசுகள்

அவர்களைத்தான் குறிவைத்து பிடிப்பார்கள் பாதிரிகள், இதெல்லாம் அவர்கள் மத சம்பிரதாயம்

அப்படிபட்ட எளிய குடும்பத்தின் வாரிசு திருச்சி செமினரி எனப்படு குருத்துவ கல்லூரியில் தற்கொலை செய்திருக்கின்றது, ஒரு வார்த்தை சர்ச்சையாகும்?

செமினரி என்பதும் சாதி முதல் எல்லா ஏற்றதாழ்வும் நிறைந்த இடமாகிவிட்டது, எல்லா பாகுபாடுகளும் அட்டகாசமும் அங்கும் உண்டு

“கடல்” படத்த்தில் இதை மிக நுட்பமாக காட்டியிருப்பார் மணிரத்னம், அதில் உண்மை இல்லாமலில்லை

அம்மாதிரி நுண்ணிய காட்சிகளை ரசிக்க தெரியாததால் இருவர் படம் போல கடல் படமும் தோற்றது

சரி விஷயத்துக்கு வரலாம்

இதோ போல் ஒரு மர்ம மரணம் காஞ்சிமடத்தில் நடந்திருந்தால் தமிழகம் தாங்கும் என கருதுகின்றீர்கள்?

இந்துக்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு தனி நீதி என்பது இங்குள்ள தத்துவம்