ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி …
இன்னும் ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி வரும் என அறிவித்தாகிவிட்டது
சாமான்ய கடைக்காரனுக்கும், சிறிய தொழில்களுக்கும், கம்பெனிகளுக்கும் இன்னும் பணம் புழங்கும் இடத்தில் எல்லாம் இருப்பவர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்?
அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கபட்டிருக்கலாம், சாமானியருக்கு என்ன புரியும்?
மளிகை முதல் இன்னும் பல கடை நடத்துவபர்கள் எல்லாம் கற்றறிந்தவர்களா? இல்லை அதில் பாமரரும் உண்டு
இந்த ஜிஎஸ்டி நாட்டுக்கு தேவையா என்றால் நிச்சயம் தேவை, பெரும் வரிகுழப்பங்களை அது தீர்க்கும்
ஆனால் அதற்கான தயாரிப்புகளை செய்துவிட்டோமா? என்றால் தெரியவில்லை, இல்லாவிட்டால் இது அடுத்தமாதம் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தபோவது உறுதி
அரசுகள் இதனை முன்னேற்பாடாக செய்ய வேண்டும், ஆனால் மத்திய அரசு மாட்டுகறியில் சிக்கி இருக்கின்றது, மாநில அரசு ஆளும் கட்சியின் கபடி போட்டியில் தீவிரமாக இருக்கின்றது
இப்படிபட்ட நிலையில் அடுத்தமாதம் ஏராளமானோர் கொஞ்ச நாளைக்கு தலையினை பிய்த்துகொண்டு தவிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
சும்மாவே உள்நாட்டு உற்பத்தி சரிந்து கிடக்கின்றது, இதில் ஜிஎஸ்டி சர்ச்சையும் சேர்ந்துகொண்டால் அது இன்னும் பின்னடைவாகும், அந்த வரிகணக்கு கொஞ்சம் குழப்பமானது
தகுந்த ஏற்பாடுகள் செய்தால் நாட்டிற்கு நல்லது, இல்லையெனில் அந்த ரூபாய் மதிப்பிழப்பு போல பெரும் குழப்பம் ஏற்பட்டுத்தான் மெல்ல தீரும்