ஒரு வகையான வியாதி இது

அந்த சாவித்திரி பூலே என்பவர் பிறந்தநாள்தான் ஆசிரியர் நாள் என கொண்டாடபட வேண்டுமாம் ஒரு கோஷ்டி கிளம்பிற்று

அவர்களை பொறுத்தவரை தலித்துகளுக்கு கல்வி கொடுத்தவர்கள்தான் உலக பிரபலங்கள், சாதனையாளர்கள்

சரி அன்றே பீமாராவ் எனும் தலித் மாணவனுக்கு கல்வி கொடுத்தாதானே ஒரு பிராமண ஆசிரியன், அவன் பிறந்த நாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாட கூடாது என கேட்டால் பதில் இருக்காது

சரி, நாமும் நம் பங்குக்கு ஒரு கல்லை வீசிவிட்டு செல்வோம்

தமிழகத்தில் கல்வியினை குறிப்பகா பெண் கல்வியினை தொடங்கி வைத்ததில் கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு பெரும் பங்கு உண்டு மறுக்கமுடியாது

லண்டனில் இருந்தாள் அந்த சாரா, அவள் குடும்பத்து பெயர் ட்க்கர்

அம்மணிக்கு நடக்க முடியாது வெறும் நாற்காலி வாசம்தான்

இந்தியாவில் இருந்து திரும்பும் மிஷனரிகளிடம் அவள் கதை கேட்பது வழக்கம், அவர்கள் அக்கால இந்தியாவின் நிலையினை சொல்வார்கள் அதில் மிகைபடுத்தலும் உண்டு

உதாரணத்துக்கு இன்று தரித்திர தேசமாகிவிட்ட வங்கம் அன்று பொன் விளையும் பூமியாய் இருந்தது, அதை சுரண்டியது கிழக்கிந்திய கம்பெனி ஆனால் அம்மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என அழுததும் அதே லண்டன் மிஷினரி

கட்டபொம்மனை கொன்றதும் கிழக்கிந்திய கம்பெனி அதே நெல்லைபகுதியில் வறுமை என அழுததும் மிஷனிரி

சரி நாம் விஷயத்துக்கு வருவோம்

இந்தியாவில் கல்வி இல்லை,பெண் கொடுமை அதிகம், அய்யகோ விபச்சாரிகளாக வறுமையில் வாடுகின்றார்கள் என மிஷினரிகள் சொல்ல சொல்ல மனம் மாறுகின்றாள் சாரா, ஒரு கட்டத்தில் அந்த கண்ணீர் கதைகளை கேட்டு மனம் நொந்து அழுகின்றாள்

தன் முடமான வாழ்வு அவளை மேலும் சிந்திக்க வைக்கின்றது, இந்திய பெண்கள் படித்தால் வாழுவார்களா? கல்வி பெற்றால் வாழுவார்களா என் திரும்ப திரும்ப கேட்கின்றாள்

மிஷினரிகள் ஆம் என்கின்றன‌

தன் முடங்கிய கால்களோடு இந்திய பெண்களுக்காக லண்டனில் பிச்சை எடுத்தாள் அவள், வீடு வீடாக கதவை தட்டி பிச்சை கேட்டாள்

நிதி திரண்டது, தன் நகையினை விற்றாள் சொத்துக்களை விற்றாள் செலவுகளை எல்லாம் சுருக்கி அந்த நிதியினை இங்கு அனுப்பினாள்

அதில் எழுந்ததுதான் நெல்லையில் காணும் சாரா டக்கர் பள்ளி, கல்லூரி எனும் பெண்களுக்கான கல்வி சாம்ராஜ்யம்

அப்பொழுதெல்லாம் திராவிடம் என்றொரு குரலே இங்கு கிடையாது, சமூக நீதி எனும் அர்த்தமில்லா வாதங்களெல்லாம் இல்லா காலம்

ஆம் அவள் இந்தியாவிற்கு வந்ததுமில்லை நேரில் இம்மகளிரை கண்டதுமில்லை

ஆனால் துடித்து கதறி தன்னால் முடிந்ததை செய்து கல்வி விதை ஊன்றியிருக்கின்றாள்

இந்த பூலே போன்ற புரட்சிகளை விட ஆயிரம் மடங்கு சிலாகிக்க கூடியது அந்த மாற்றுதிறனாளியின் சேவை

மனதால் இந்தியர் கஷ்டத்தை உணர்ந்த மகத்துவம் அது

சரி அந்த மாபெரும் பெண்மணி சாரா டக்கரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவிப்போமா என கேளுங்கள் ஓடிவிடுவார்கள்

இவ்வளவுக்கும் தாழ்த்தபட்ட பெண்களுக்கு கல்வி கொடுத்த முதல் நிறுவணம் இந்தியாவில் அதுதான்

ஆனால் செய்யமாட்டார்கள்

காரணம் சாரா டக்கர் தலித்தியம் பேசவில்லை, அம்பேத்காரியம் பிராமண எதிர்ப்பு பேசவில்லை

மாறாக மனிதம் பேசினாள்

அவளின் கனவாக நெல்லையில் பள்ளி கல்லூரி பெண்களுக்காக திறக்கபட்டபொழுது பெரியார் பிறக்கவே இல்லை

இதனால்தான் பெரியாரால் படித்தோம் என சில அரைவேக்காடுகள் அலறும்பொழுது ஆத்திரம் வருகின்றது

மனிதம் பேசியது யாராக இருந்தாலும் பிராமணன் ஒழிக, இந்துமதம் ஒழிக பார்ப்பான் ஒழிக என சொல்லாவிட்டால் இவர்கள் ஏற்க மாட்டார்கள்

எந்த மானிடநேயனும் இந்துமதத்தையும் பிராமணியத்தையும் சீண்டினால் மட்டுமே இவர்கள் ஏற்றுகொள்வார்கள்

ஒரு வகையான வியாதி இது, மருந்து இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை