ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது
ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது, அது எந்த அளவு கறுப்பு சட்டைகளின் பிடியில் ஊடகம் சிக்கியிருக்கின்றது என்பதை காட்டுகின்றது
ஆக்டோபஸ் போல் அல்ல, அந்த காளிகன் போல ஆயிரம் கரங்களில் கறுப்பு சட்டை மற்றும் இந்து எதிர்பு சக்திகளின் கையில் அவை சிக்கியிருக்கின்றன
விஷயம் அப்படியானது
அய்யா வைகுண்டரின் தலமை பதியின் அதிபதி பாலபிரஜாபதி எனும் திருட்டு சாமியின் பிறந்தநாளுக்கு கறுப்பு சட்டை வீரமணி நேரில் வாழ்த்த வருவதாக உலகெல்லாம் அண்ட சராசரமெங்கும் செய்தி பரப்பபட்டது
பாலபிரஜாபதியும் தன்னை புட்டபர்த்தி சாய்பாபா போல நினைத்து கொண்டு வீரமணியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் கழுத்தையும் காதையும் கொடுத்து குனிந்து நின்றார்
இந்நிலையில் புனிதமான பதிக்கு நாத்திக இம்சை வருவது எப்படி என எதிர்ப்பு எழுந்தாலும் பிரஜாபதி வீரமணியில் பெருமாளையே கண்டு அவர்போக்கில் இருந்தார்
இந்நிலையில் சாமிதோப்பில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பிரஜபாதி நிலையினை சிக்கலாக்கியிருகின்றார்கள்
அவர் உட்சிறையில் வைக்கபட்டு இளைஞர் சிலர் கம்பும் கட்டையுமாக வீரமணி வரும்பாதையில் அமர்ந்திருக்கின்றனர்
விஷயம் எல்லை மீறுவதை அறிந்து வீரமணியின் வாழ்த்து பயணம் ரத்து செய்யபட்டிருக்கின்றது
குமரி ஆன்மீக மண் என்பது உறுதிசெய்யபட்டிருக்கின்றது, அய்யா வைகுண்டரின் புனிதமான பதி சில அழுக்கு கால்களில் இருந்து தப்பியிருக்கின்றது
இதை ஒரு ஊடகமும் சொல்லாது, ஆனால் நாம் கேள்விபட்டதை சொல்லிவிட்டோம், இன்னும் சந்தேகமிருந்தால் சாமிதோப்பு பக்கம் விசாரியுங்கள்
வீரமணியினை விரட்டிய வீர கன்னியாகுமரி இந்துக்களுக்கு நன்றி, அவர்களுக்கு மானமும் அறிவும் உணர்ச்சியும் இருக்கின்றது
இந்துக்களுக்கு அஞ்சி தலைதெறிக்க ஓடினார் என நேற்று கன்னியாகுமரி வரலாறு பொறித்து கொண்டது