ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது
ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது
ஆம், தலைவி குஷ்பு நம் பதிவுகளை படிக்கின்றாரோ இல்லையோ அவரின் மணாளனும் பிராண நாதனுமாகிய சுந்தர்.சி படித்து இருக்கின்றார்
ஆக்சன் என்றொரு உலகளாவிய உளவு கதையினை சினிமாவாக்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றார், படம் வைகோ போல முடங்கியது வேறுவிஷயம் என்றாலும் அவரின் முயற்சி வரவேற்கதக்கது
இந்திய உளவுதுறை மற்றும் ராணுவம் சர்வதேச மாபியா, தாவூத் இப்ராகிம் என கலந்து கட்டி அழகான முயற்சியினை செய்திருக்கின்றார்
பொதுவாக காமெடி படங்களுக்கு அறியபடுபவர் சுந்தர், படு ஜாலியான ஆசாமி, அவரின் படங்கள் அப்படி, ஒரு வீட்டை கூட தாண்டாது, அதற்குள்ளே முடிந்துவிடும்
அப்படிபட்ட சுந்தர்.சி முதல்முறையாக துருக்கி முதல் பாகிஸ்தான் வரையிலான உலக உளவு பின்னலை வைத்து படமெடுத்தால் எப்படி?
நிச்சயம் நல்ல முயற்சி, அப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சில சொதப்பல்கள் நடந்தன
சுந்தர் சிங்கம் பட சாயலுக்கு படமெடுக்க முயன்றிருக்கின்றார், வேகமாக காட்சி அமைப்பதாக
நினைத்து வேகமாக ஓடி கிணற்றில் விழுந்துவிட்டார்
விஷால் சரியான தேர்வு அல்ல, சூர்யா மிக சரியான தேர்வாக இருந்திருக்கலாம்
நல்ல கதையினை அழுத்தமில்லாமல் அவசரத்தில் அள்ளி தெளித்து நாசமாக்கிவிட்டார்
பொதுவாகவே அரேபியா மற்றும் பாகிஸ்தானில் படமாக்கபடும் தமிழ்படம் ஓடாது என்றொரு சென்டிமென்ட் உண்டு , அது இங்கும் பலித்துவிட்டது
எது எப்படியாயினும் சுந்தர்.சி நம் பதிவுகளை படிக்கின்றார் என்பதை சங்கம் புரிந்து புளகாங்கிதம் அடைந்து, ஆனந்த களிஉவகை கொள்கின்றது
ஆனால் அந்த சதிகாரர் தனக்கு தேவையான கதையினை மட்டும் எடுப்பார் நிச்சயம் தலைவி குஷ்புவிடம் நம்மை பற்றி சொல்லமாட்டார் என சங்கத்தின் உள்ளுணர்வு உளவு உணர்வு எச்சரிப்பதால் மிகுந்த வேதனையில் இருக்கின்றது சங்கம்
