ஒரு விஷயம் மறைக்கின்றார்கள்
இஸ்லாமியர்களை காக்க வந்திருப்பதாக சொல்லிகொள்ளும் கட்சி திமுக , இன்று பக்ரீத் வாழ்த்துக்களை சொல்லி கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஒரு விஷயம் மறைக்கின்றார்கள்
அதாவது திமுகவின் முக முத்துவின் புகழ்பெற்ற இஸ்லாமிய பாடலான “நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா” எனும் அற்புதமான பாடல் உண்டு.
முக முத்து எனும் அற்புதமான பாடகன் அக்காலத்தில் பாடிய அழகான பாடல், கண்ணதாசனின் கிருஷ்ண கானம் பாடலுக்கு ஈடானது.
ஆனால் ஒரு திமுகவினராவது அப்பாடலை நினைவு கூர்வார்களா என்றால், அந்த பாடல் உருவாக அன்று முக முத்துவுக்கு மறைமுகமாக அவர் உதவியதை சொல்வார்களா என்றால் இல்லை
ஏன் என்றால் அதற்கு பல காரணங்கள்
கலைஞர் வீட்டில் ஸ்டாலின், கனிமொழி உதயநிதி மட்டுமே நினைக்கபட வேண்டியவர்கள் என்பது அவர்கள் வலிந்து ஏற்றுகொண்ட கடப்பாடு
ஆனால் இஸ்லாமிய பண்டிகைகள் வரும்பொழுதெல்லாம் அந்த நாகூர் ஹனிபா போல, கண்ணதாசனின் அழகான வரிகள் போல, முக முத்துவும் நினைவுக்கு வருவார்