ஒரே நாட்டில் எத்தனை நிற பாஸ்போர்ட்டுகள்

முன்பெல்லாம் படிக்காதவர் பாஸ்போர்ட், பட்டம் பெற்றோர் பாஸ்போர்ட் என பிரிக்க ஒருமுறை இருந்தது

ECR, ECNR என பிரித்திருந்தார்கள், பின்னாளில் அது அகற்றபட்டது

இப்பொழுது சில காரணங்களுக்காக பிரிக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு பக்கம் சேர்த்தால் போதுமானது

மாறாக 10ம் வகுப்புக்கு கீழ் காவி கலரும், அதற்கு மேல் வேறு நிறம் என்பதெல்லாம் குழப்த்தை கொண்டுவரும்

அது இன்னும் சிக்கலாகி எ.கே.ஜி பாஸ் போர்ட் ஒரு கலர், பிஎச்டி பாஸ்போர்ட் இன்னொரு கலர் என்ற ரீதிக்கு செல்லும்

அதன் பின் சர்வதேச விமான நிலையங்களில் இந்தியர் சிகப்பு கலர் ஜிங்குசா, பச்ச கலரு சிங்குசா, மோடி சிங்குசா என ஒருமாதிரி அலைவார்கள்

ஒரே நாட்டில் எத்தனை நிற பாஸ்போர்ட்டுகள் என சர்வதேசம் தலையினை பிய்த்துகொள்ளும், இந்தியாவின் மதிப்பே சரியும்

இவர்கள் செய்வது காவி கலர் மாயம், அதனை இப்படி தொடங்குகின்றார்கள். ஏன் காவிமயம் அதேதான் பாகிஸ்தான் பாஸ்போர்ட் பச்சை என்றால் இந்திய பாஸ்போர்ட் காவியாக இவர்களுக்கு இருந்தாக வேண்டும்

இந்த கடல் நீல நிறமாக இருப்பது நிச்சயம் இவர்கள் கண்ணுக்கு உறுத்தும், விரைவில் அதனையும் காவி கலராக்கி, இந்திய பெருங்கடல் காவிகலரில் இருந்தால்தான் 
சரி என்பார்கள், பொறுத்திருந்து பாருங்கள்