ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 05

“தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து”

இக்குறள் “தான் செய்யும் வினை எல்லாம் தன்மையற உணரில் காஞ்சனமே ஆகும் கருத்து” என பிரிந்து பொருள் தரும்

அதாவது ஒருவன் தவத்தில் மூழ்கி ஈசனில் நிறைந்து அந்த ஞான சிந்தனையில் பிரபஞ்ச பேரருளில் நிறைந்து தன் உயர்ந்த தன்மையில் சிந்தித்து சொல்லும் கருத்துக்கள் பொன்போல் மின்னும்

பொன்போல் மின்னும் என்றால் அது எல்லா காலமும் ஜொலித்து கொண்டே இருக்கும், அழியாத ஜொலிப்புடன் மதிப்புடன் காலம் காலமாக நிலைத்திருக்கும்

இதற்கு மிகபெரிய உதாரணமாக திருமூலரை சொல்லலாம், சித்தர்களை சொல்லலாம் இந்த குறளை பாடும் ஒளவையாரையும் சொல்லலாம், அவர்களின் கருத்துக்களாகிய இப்பாடல்கள் எக்காலமும் பொன்போல் மதிப்பு வாய்ந்தவை, அது அழிவதோ துருபிடிப்பதோ இல்லை எப்பொழுதும் அவை ஞானமாக மின்னிகொண்டேதான் இருக்கும்