ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 06
“கூடக மான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து”
இந்த குறள் “கூடகமான குறி எழுத்தை தானறியில் வீடகமாகும் விரைந்து” என பொருள் தரும்
கூடகமான குறி எழுத்து என்பது குறில் எழுத்துக்கள் கூடிவருவதை சொல்கின்றது, ஓம் எனும் மூல மந்திரம் அ+உ+ம் என கலந்து வரும், இந்த ஓம் எனும் வார்த்தைதான் யோகத்தின் மூலம்
இந்த எழுத்தின் சக்தியினை அறிந்து அதனை உச்சாடனம் செய்தால் மனமானது முக்தி எனும் வீடுபேற்றை அடையும், மனமே சிவன் வாழும் கயிலாயமாகும் என்பது குறளின் பொருள்
ஓம் எனும் மந்திரத்தின் மகிமையினை சொல்லி, அந்த மந்திரத்தினால் மனதில் சிவன் வாழும் கயிலாயத்தை உருவாக்கலாம் என்பது குறளின் பொருள்