ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 07

“வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று”

உள்ளத்தை வீடு அதாவது முக்தி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஜோதிவடிவான இறைவனுடன் மனதால் ஒன்றித்தல் வேண்டும் என்கின்றார் ஓளவையார்

அதாவது உள்ளம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக வேண்டும் என்றால் ஜோதிவடிவான இறைவனுடன் ஆன்மாவில் ஒன்றிடல் வேண்டும் என்பது ஒளவை வலியுறுத்தும் போதனை