ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 03
“கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு”
இக்குறள் “கரும்பினில் கட்டியும் காய்பாலில் நெய்யும் இருண்ட நீரும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும்
கரும்புக்குள்தான் கட்டி வெல்லம் ஒளிந்திருக்கின்றது, ஆனால் அது கரும்போடு விளையாது. கரும்பை பிழிந்து சாறு எடுத்து அதனை காய்ச்சினால் கட்டி வெல்லம் கிடைக்கும்
பாலுக்குள் நெய் உண்டு, ஆனால் பாலோடு கறக்கமுடியாது. பாலை பக்குவபடுத்தி கடைந்து எடுத்தால் நெய் கிடைக்கும்
அப்படியே இரும்பு கடினமானது ஆனால் அதை வெப்பத்தில் உருக்கும் பொழுது இரும்புக்குள் இருக்கும் நீர் வெளிவருகின்றது , இரும்பு நீர் நிலையினை எட்டுகின்றது
ஆம், கரும்புக்குள்ள் வெல்லமும் பாலுக்குள் நெய்யும் இரும்புக்குள் நீரும் போல நம்மில் சிவன் மறைந்திருக்கின்றான் தவத்தாலும் யோகத்தாலும் நம்மை வருத்தினால் அந்த இறைவனை உணரலாம் என்பது குறளின் பொருள்